இது நிஜமாகவே என் மன நிலைக்கு உதவுமா?
நம் செழிப்பான இந்திய கலாச்சாரத்தில், நம் மனத்தின் காயங்களை ஆற்றவும் குணப்படுத்தவும் இசையின் திறனை பயன்படுத்தியுள்ளோம். நம் தாயின் இனிமையான தாலாட்டு முதல் A.R ரஹ்மானின் இசை மற்றும் M.S சுப்புலட்சுமியின் இசையுடன் வேறு உலகத்திற்கு தப்பித்து செல்வது வரை நாம் இதை பல நேரங்களில் அனுபவித்து உள்ளோம்.
மேற்கத்திய நாடுகளில், ஆராய்ச்சியாளர்கள் ஒலி மற்றும் இசையின் சக்திகளை கொண்டு மனக் காயங்களை குணப்படுத்த முயற்சிக்கின்றனர்.
ப்ரூசியா (1998) இசை சிகிச்சையை ஒரு முறையான தலையீடாக பரிந்துரைத்து, இதில் இசை அனுபவங்கள் மற்றும் அவற்றின் மூலம் உருவாகும் உறவுகளை மாற்றத்தின் சக்திகளாகப் பயன்படுகிறது என்பதை கூறி சிகிச்சையாளர் வாடிக்கையாளருக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறார்.
இசை சிகிச்சை என்பது இசையை மட்டும் உபயோகித்து சிகிச்சை அளிப்பது என்பது அல்ல. இது ஒரு பயிற்சி பெற்ற நிபுணரால் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் ஒரு புதிய துறையாகும்.
இசை சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது? இசை சிகிச்சையின் விளைவுகளுக்கு ஐந்து காரணிகள் பங்களிக்கின்றன என்று கூறப்படுகிறது.
கவனத்தின் ஏற்ற இறக்கங்கள்
முதலாவது கவனத்தின் ஏற்ற இறக்கங்கள். இசை நம் கவனத்தை ஈர்த்து எதிர்மறை அனுபவங்களுக்கு வழிவகுக்கும் தூண்டுதல்களிலிருந்து நம்மை திசை திருப்புகிறது (கவலை, வலி, பதட்டம் போன்றவை). மருத்துவ நடைமுறைகளின் போது இசையைக் கேட்பதன் மூலம் கவலை மற்றும் வலியைக் குறைக்கும் விளைவுகளையும் இது விளக்கக்கூடும்.
உணர்ச்சிகளின் ஏற்ற இறக்கங்கள்
இரண்டாவது வழி - உணர்ச்சிகளின் ஏற்ற இறக்கங்களுக்கு இசை சிகிச்சை உதவுகிறது. இசையினால் உணர்ச்சிகளின் துவக்கம், பராமரிப்பு, முடிவு மற்றும் ஏற்ற இறக்கங்களில் ஈடுபட்டுள்ள மூளைப் பகுதிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அறிவாற்றலின் ஏற்ற இறக்கங்கள்
இசை அறிவாற்றலையும் மாற்றியமைக்கிறது. இசை நினைவக செயல்முறைகளுடன் தொடர்புடையது (இசை தகவல்களின் குறியாக்கம், சேமிப்பு மற்றும் குறிவிலக்கம் மற்றும் இசை அனுபவங்கள் தொடர்பான நிகழ்வுகள் உட்பட). இது இசை தொடரியல் மற்றும் இசை பொருளின் பகுப்பாய்விலும் ஈடுபட்டுள்ளது. ஞாபக மறதியை குறைப்பதற்கு ஒரு இசைக் கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்வது பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது.
நடத்தையில் ஏற்ற இறக்கங்கள்
நடத்தையில் ஏற்ற இறக்கங்களை மாற்றியமைப்பதற்கும் இசை சிகிச்சை செயல்படுகிறது. நடை, பேச்சு மற்றும் புரிந்துகொள்வதில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை இசையினால் தூண்டி அவைகளை நிதானமாக்க முடியும்.
தொடர்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்
இசை தகவல்தொடர்புகளையும் பாதிக்கிறது. உண்மையில், இசை என்பது தகவல்தொடர்புக்கான ஒரு வழியாகும். எனவே, உறவுகள் மேம்படுவதற்கு இசை ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொள்கிறது.
ஒரு நபர் தன்னை சூழ்ந்திருக்கும் ஒரு பிரச்சனையை பிரதிபலிக்கும் வகையில் அந்த சூழ்நிலையை விளக்கும் அர்த்தத்துடன் இருக்கும் இசையை தேர்ந்தெடுத்து கேட்பதன் மூலம் கூட தொடர்பு உண்டாகும். ஒரு கண்ணதாசன் பாடல் உங்களுடன் மனநிலையுடன் மிகவும் ஒத்து போகும். அந்த பாடல் தொடர்பான பிரச்சினை உங்களுடன் எவ்வளவு தொடர்புபடுத்துகிறது என்பதை உங்கள் நண்பர் உடனடியாக புரிந்துகொள்வார்.
உதாரணத்திற்கு – Pink Floyd அல்லது Doors குழுக்களின் பாடல்களில் நம்மை தொடர்புபடுத்தும் தனிமை மற்றும் வெறுமை பற்றிய குறிப்புகள் உள்ளன. இதை ஒரு அழகான வடிவத்தில் கேட்பது ஆறுதலளிக்கிறது. எங்கெங்கு சாத்தியமோ அங்கே, நம் சிக்கல்களுடன் இசையை தொடர்புபடுத்தவோ அல்லது இசை கொண்டு வரும் தொடர்புகளை பற்றி பிரதிபலிக்க தனிநபர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.