இசை சிகிச்சை மனஅழுத்தத்தை எவ்வாறு குறைக்கிறது?
சமீபத்திய அறிவியல் ஆய்வில் மனச்சோர்வுக்கான அறிகுறிகளில் இசையின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை ஒரு சிறிய தொகுப்பாக இங்கே தந்துள்ளோம்.
இசை, சிகிச்சை மற்றும் அதன் மருத்துவ குணங்களைப்பற்றி 2020 -ல் கோக்ரேன் அமைப்பு நிகழ்த்திய 55 மருத்துவ பரிசோதனை ஆய்வுகளின் புள்ளிவிவரம் மூலம், அதன் வித்தியாசத்தை ஆராய்ந்து பின்வரும் தகவல்களைத் தந்துள்ளோம்.
இசை சிகிச்சையாகவும், மருந்தாகவும் மனசோர்வு அறிகுறிகளைக் குறைப்பதில் பல்வேறு வழிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இசை மருத்துவம் இன்னும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இசை மருத்துவத்தை பற்றிய விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இசை சார்ந்த சிகிச்சைகள் நீண்ட காலமாகவே வழக்கத்தில் இருந்தும், சமீபமாக அதன் உபயோகம் மற்றும் பயன்பாடு அதிகமாக உள்ளது.
இசை பற்றிய விவாதங்கள் மற்றும் மேம்பட்ட இசை சிகிச்சை போன்ற நுட்பங்களை விட பொழுதுபோக்கு வழி சிகிச்சை, வழி காட்டுதலுடன் கூடிய கற்பனை செயல்முறை மற்றும் இசை மூலம் கிடைக்கும் அமைதி ஆகியவை மிகவும் பயனுள்ளது.
55 வெவ்வேறு மதிப்பாய்வுகளிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து தொகுக்கப்பட்டதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இசை மருத்துவம் மற்றும் இசை சிகிச்சை என்றால் என்ன?
அமெரிக்கன் மியூசிக் தெரபி அசோசியேஷன் (AMTA) இசையை அடிப்படையாகக்கொண்டு இரண்டு வகையான சிகிச்சை முறையினையும் அதற்கான தகுதி வாய்ந்த நிபுணர்களையும் கொண்டுள்ளது, அவர்கள் தங்களிடம் சிகிச்சை பெறுபவர்களுடன் இணைந்து சிகிச்சை அளிக்கின்றனர்.
இசை மருத்துவத்தில் நிபுணத்துவம்
இசை சிகிச்சை
ஒரு இசை மருத்துவ பயிற்சியாளர் மற்றும் ஒரு பொதுநல மருத்துவர், அவர் இசை சிகிச்சையிலும் பயிற்சி பெற்றவர். மேலும் அவர் வழங்கும் மருத்துவ சிகிச்சையோடு துணையாக இசை சிகிச்சையை வழங்குகிறார். இந்தியாவில், இது போன்ற மருத்துவ நிபுணர்கள் அதிகம் இல்லை
ஒரு இசை சிகிச்சை நிபுணர் தன்னிடம் சிகிச்சை பெறுபவரின் உடல், மனம் மற்றும் அறிவாற்றல் சார்ந்த சவால்களை ஒரு தனிப்பட்ட அமர்வில் புரிந்து கொள்கிறார். இதன் மூலம் மருத்துவர், சிகிச்சை பெறுபவருக்கு தேவையான சிகிச்சையை பரிந்துரைக்கமுடியும். தனிப்பட்ட அமர்வில் சிகிச்சை பெறுபவரின் சவால்களை மருத்துவர் புரிந்து கொண்டு வழிநடத்துவதன் மூலம் இசை சிகிச்சையின் பயனைநன்கு பெறலாம்.
இசை சிகிச்சையின் வகைகள்:
இது பொதுவாக இரண்டு விதமாக வகைப்படுத்தப்படுகிறது
செயல் திறன்
ஏற்புத்திறன்
செயல்திறன் வகையில் இசைத்துறைசார்ந்தவர்களை ஈடுபடுத்துவதாகும். உதாரணமாக, இசையமைத்தல், மேம்படுத்துதல், மறு உருவாக்கம் செய்தல், பாட்டுகள் எழுதுதல், வாசித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
ஏற்புத்திறனில் நாம் அனைவருமே அடங்குவோம், ஏனெனில் இதில் பாட்டுகள் கேட்டல் மற்றும் அதனை ஆய்வுசெய்தல் அடங்கும்.
வேறு சில சிகிச்சை முறைகளும் உள்ளன. அவை,
பொழுதுபோக்கு வழி இசை சிகிச்சை
வழிக்காட்டுதலுடன் கூடிய கற்பனை செயல்முறை இசை சிகிச்சை,
இசையின் மூலம் அமைதியடைய செய்தல் மற்றும்
மேம்பட்ட இசை சிகிச்சை
சில நாடுகளில் மன அழுத்தத்திற்கான சிகிச்சை மிக குறைந்த அளவிலேயே உள்ளது. காரணம் மருத்துவ வசதியின்மை, விழிப்புணர்வு இல்லாதது, மற்றும் சமூகத்தில் காணப்படும் களங்க உணர்வு. இசை சிகிச்சை என்பது மிக குறைந்த மருத்துவசெலவில் அனைவரும் பயன் பெறக்கூடிய ஒரு சிறந்த சிகிச்சை. மேலும் இசை சிகிச்சை மற்றும் அதன் பயன்கள் பற்றிய தகவல்களைப் பெற, எங்களின் www.thunai.org இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.