சமூகங்கள் காலங்காலமாக இசையின் குணப்படுத்தும் சக்தியைப் பயன்படுத்தி வருகின்றனர்.உதாரணமாக, இசையினால் நிதானத்தை ஏற்படுத்தி, பதட்டத்தைக் குறைக்க முடியும் என்பதை நாம் நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம். இது நாள்பட்ட வலியையும் எளிதாக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே. விஞ்ஞானம் சிறிது காலத்திற்கு இதற்கான காரணங்களை புரிந்து கொள்ள முயன்றது. சமீபத்திய இருபது ஆண்டுகளில் இந்த துறை அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஸ்ட்ரியேட்டம் எனப்படும் நமது மூளையின் சந்தோஷ மையத்தில், இசையின் பாதிப்பு ஏற்படுவதால் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. நாம் விரும்பும் இசை, டோபமைன் என்னும் மகிழ்ச்சி ஹார்மோனை வெளியீடச் செய்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது மற்றும் பாராட்டினைத் தேடும் நமது எண்ணத்தை தூண்டுகிறது. சோகமான எண்ணங்கள் மற்றும் நடத்தைகளிலிருந்து விலகி, இதுபோன்ற இன்பத்தை நாம் தேடத் துவங்குவோம்.
இசை நமது (பாராசிம்பததெடிக் ) இணை பரிவு நரம்பு மண்டலத்தையும் தூண்டுகிறது, இதய துடிப்பு, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கார்டிசால் அளவைக் குறைப்பதன் மூலம் இது உட்சுரப்பியல் அமைப்பிலும் (HPA அச்சு) செயல்படுகிறது..
நீங்கள் ஒரு இசைக்கருவியைக் கற்றுக் கொள்ளும்போது ஒரு நரம்பியல் நெகிழ்வு ஏற்படுகிறது.. நீங்கள் இசையைக் கற்றுக் கொள்ளும்போது, வாத்தியங்களை வாசிப்பதால் முன் புற கார்டெக்ஸ் (சிந்தனை மையம் ) வளர்கிறது. ஒரு இசைக்கருவியை எவ்வாறு வாசிப்பது என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க இது ஒரு நல்ல காரணம். நீங்கள் வயது வந்தவராக இருந்தாலும் இது பயனளிக்கும்.
இசையைக் கேட்பது கூட உங்களை "இசையுடன் ஒன்றி " இருக்க அனுமதிக்கிறது, மேலும் அந்தக் கணத்தில் தியானத்தின் பல நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் மூளையை , தியானம் தரும் ஓய்வு தளங்களில் வைக்க உதவும் தொழில்நுட்பத்தின் திறனை நீங்கள் பெற்றிட உதவும் Calm மற்றும் Syntution போன்ற செயலிகள் இன்று உள்ளன. இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல, நமது ஆலய மணிகள், தாளங்கள் மற்றும் சங்குகள் ஒலிக்கப்படும் போது வெளிப்படும் ஒரு குறிப்பிட்ட அதிர்வலையை பயன்படுத்தி நமது மூளைக்குள் (ஆல்பா மற்றும் பீட்டா அமைப்பு ) அமைதியான அதிர்வினை தூண்டின..
இசை சிகிச்சை என்பது உங்கள் உடல் மற்றும் மனநல பிரச்சினைகளுக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட வழியில் இசையைப் பயன்படுத்துவது. உங்களுக்கும் உங்கள் மன ஆரோக்கியத்திற்கும் எந்த வகையான இசை பயன்தரும் என்பதைப் புரிந்துகொள்ள குறிப்பாக பயிற்சி பெற்ற ஒரு இசை சிகிச்சையாளர், உங்களுக்காக குறிப்பிட்ட ஒன்றை வடிவமைக்க முடியும். சிகிச்சையாளர் உங்களுக்கு சரியான பாடல்களை "ஒலிக்கச் செய்வதை " விட இது பலன் தரக்கூடியது..
இசை சிகிச்சை பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்ட சில துறைகள் :
1. பக்கவாத மறுவாழ்வு - மூளையின் சேதமடைந்த பகுதிகளின் வேலைகளை பகிர்ந்து கொள்ள மற்ற மூளை பகுதிகளுக்கு பயிற்சி அளித்தல்
2. மனச்சோர்வு மற்றும் பதட்டம், பொது மன அழுத்த மேலாண்மை
3. நாள்பட்ட வலி மற்றும் ஃபைப்ரோமியால்ஜியா
4. மன இறுக்க கோளாறுகள்
5. அல்சைமர் மற்றும் டிமென்ஷியா - ஞாபக இழப்புகள்
6. மனநிலைக் கோளாறுகள் உள்ள குழந்தைகள்
இது சமூக பிணைப்புகளையும் பச்சாத்தாபத்தையும் உருவாக்க முடியும் என்பதையும் ஆராய்ச்சி காட்டுகிறது. பலருடன் சேர்ந்து பாடுவது ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கிறது - இது சார்பு மற்றும் நல்வாழ்வைக் குறிக்கும் ஹார்மோன் ஆகும்.. அதிர்ச்சியிலிருந்து தப்பிப்பிழைத்தவருக்கு அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது. ஆன்லைனில் கூட ,இன்றே ஒரு இசைக் குழுவில் சேர்வது பலன் தரும் !!
,
இசை உங்களில் சிலருக்கு தூண்டுதலாகவும் இருக்கலாம். நீங்கள் வேண்டாத ஒரு ஞாபகத்தை ஒரு பாடல், ஒரு மெட்டு அல்லது ஒரு வகையான இசையுடன் இணைத்து பார்க்கலாம். ஒரு தெரபிஸ்ட் , உங்களை வழிநடத்தி, இசையின் குணப்படுத்தும் தன்மையிலிருந்து மிகச் சிறந்ததைப் பெற்றிட உங்களுக்கு உதவ முடியும். அதனாலேயே இசை மனிதகுலத்திற்கு கிடைத்த அற்புதமான பரிசு என்று புகழப்படுகிறது.
சிறந்த மன ஆரோக்கியத்திற்கான வழியை நாம் இசையால் பெறுவோம்.!!