ஆண் பிள்ளை தான் வேண்டும் என்ற சமூகத்தின் கட்டாயம் ஒரு தாயின் நல்வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது? தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை எவ்வாறு இது பாதிக்கிறது என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
நம் இந்திய நாட்டில் கடந்த நூற்றாண்டில் ஆண் பெண் குழந்தையின் சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது. ஆண் குழந்தை வேண்டும் என்ற விருப்பமே இதற்கான காரணம். நம் நாட்டில் மட்டும் அல்லாமல் இதே போல் ஆசிய கண்டத்திலும் ஆப்பிரிக்கா கண்டத்திலும் பரவலாக உள்ளது.
முதல் குழந்தை பெண்ணாக பிறந்தால் இன்னொரு ஆண் குழந்தையை பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்துகின்றனர். இதனால் அந்த பெண் மீண்டும் கருவுற பல ஆபத்தான முறைகளை முயற்சிக்கிறாள். ஒரு ஆய்வில் முதலில் பெண் குழந்தை பிறந்தால் அந்த தாய்க்கு
1 . நிறைய குழந்தைகள் இருக்கும்
2 . இன்னும் குழந்தை வேண்டும் என்ற ஆசை ஏற்படும்.
3 . ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் குறைந்த இடைவெளி இருக்கும் .
4 . கருத்தடை முறைகளை பயன்படுத்தாமல் இருப்பது.
பெரும்பாலும் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவில் சென்னை போன்ற பெருநகரத்தில் ஆண் குழந்தைக்கான கட்டாயம் வெளிப்படையாக உள்ளது. மருத்துவர்களும் சமூக பணியாளர்களும் இந்த கவலை குறித்து பெற்றோரோடமும் தேவைப்பட்டால் அவர்களது குடும்பத்தினருடனும் பேசி தீர்வை காணலாம்.