அதிர்ச்சிக்கு பிந்தைய மனஅழுத்த குறைபாடிற்கான சிகிச்சையில், அறிவாற்றல் செயலாக்க சிகிச்சை போன்ற செயல்முறைகள், சிறுவயதில் நடந்த அதிர்ச்சியின் அனுபவங்களினால் ஏற்படும் மனஅழுத்த கோளாறை சரிசெய்வதில் சிறந்த பலனை அளிப்பதில்லை.
ஆய்வுகள் தெரிவிப்பது, யோகாவின் மூலம் தசைகளில் உள்ள இறுக்கத்தையும், அதிர்ச்சிக்கு பிந்தைய மனஅழுத்த குறைபாட்டினால் ஏற்படும் உடல் சார்ந்த வலிகளையும் சரிசெய்கிறது. மேலும், நம் உடலில் ஏற்படும் மாற்றங்களும், உடலினுள் ஏற்படும் வேதியல் மாற்றங்களும் நேர்மறை பலனை தந்து நம் மனஅழுத்தத்தை குறைத்து , நம்முடைய தாங்குதிறனை வளர்கிறது. யோகா உளவியல் ரீதியாக மன முழுமையை அதிகரித்து, உடலும் மனமும் ஒன்றிணைந்து செய்யப்பட வழிவகுக்கிறது.
மாசசூசெட்ஸ்ஸில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெஸ்ட், லியாங் மற்றும் ஸ்பினாசோலா 2014 ஆம் ஆண்டு ஹட யோகாவை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், ஒருவருக்கு சிறுவயதில் ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவுகளை ஹட யோகா சரிசெய்கிறது என்று கூறுகிறார்கள்.
இந்த ஆய்வுக்குழு சிறுவயது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வளர்ந்த 31 பெண்களுக்கு அதிர்ச்சி உணர்திறன் யோகாவை 10 வாரங்களுக்கு பயிற்சியளித்தது. முடிவில், அவர்கள் கருணை, இரக்கம், உறவுமுறை,ஏற்றுக்கொள்ளுதல், மையப்படுத்துதல் மற்றும் சுய அதிகாரமளித்தல் போன்ற தன்னுடைய குணங்களில் நேர்மறையான பாதிப்பை ஏற்படுத்தி இருந்ததாக தெரிவித்தனர். இந்த அதிர்ச்சி உணர்திறன் யோகா மன அழுத்தத்தை குறைத்து, மற்றவர்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க - Trauma Sensitive Yoga