அதிர்ச்சியின் பாதிப்பு, ஒருவரின் தாங்குதிறனின் அளவை பொறுத்தது. . பலருக்கு இதனால்அதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்தக் குறைபாடு (PTSD), மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனநலக் கோளாறுகள் உருவாகலாம். இதன் அறிகுறிகள், அதிகமான விழிப்புணர்வு சமூகத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளுதல், தனிமைப்படுத்திக்கொள்ளுதல், நம்பிக்கை இழப்பு, தன்னிலை விலகல் (dissociation) போன்றவை.
அதிர்ச்சியானது உடலில் உள்ள நியூரோஎண்டோகிரைன் அமைப்புகளை பாதிக்கிறது, பரிவு நரம்பு மண்டலத்தை இயங்கச்செய்து, இணை பரிவு நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை அடக்குகிறது. மேலும், மனஅழுத்தத்தை உருவாக்கும் ஹார்மோன் (கார்டிசோல்) சுரப்பை அதிகரிக்கிறது.
அலோபதி சிகிச்சைகள், பெரும்பாலும் பக்க விளைவுகளைத் தருவதுடன் அதிர்ச்சியின் அனைத்து அறிகுறிகளையும் சரிசெய்வதில்லை. எனவே யோகா போன்ற உடல் சார்ந்த சிகிச்சைகள் அதிர்ச்சி மற்றும் அது தொடர்பான மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க பரிந்துரைக்கப்படுகின்றன.
அதிர்ச்சியின் விளைவாக ஏற்படும் மனநலக் கோளாறுகளை சரி செய்வதில் யோகா மற்றும் தியானத்தின் பங்கு குறித்த ஆய்வு டெல்லஸ் மற்றும் சில ஆய்வு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. மேலும், இவர்கள் இயற்கை பேரழிவுகள், போர், பயங்கரவாதம், வன்முறை மற்றும் சிறையில் வன்முறை அனுபவித்தல் போன்றவற்றால் ஏற்படும் அதிர்ச்சியை கையாளும் 12 விதமான ஆய்வுகளை செய்தனர்.
கலந்தாய்வு:
மேலும், இயற்கை பேரழிவுகள், தென்கிழக்கு ஆசியாவை பாதித்த 2004 இந்தியப் பெருங்கடல் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்கள், கத்ரீனா சூறாவளியில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பீகார் வெள்ளத்தில் உயிர் பிழைத்தவர்களுடன் நடத்தப்பட்டது.
யோகா மற்றும் தியானம் சார்ந்த சிகிச்சைகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிர்ச்சியைக் குறைப்பதில் கவனம் செலுத்தியது. இந்த ஆய்வுகளின் முடிவுகளில், கொடுக்கப்பட்ட சிகிச்சைகளின் மூலம் அதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்தக் குறைபாடு (PTSD), பதட்டம் மற்றும் மனச்சோர்வுக்கான அறிகுறிகள் குறைந்தது.
வன்முறையின் விளைவாக அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள், சமூக இல்லங்கள் மற்றும் சிறார் சீர்திருத்தப்பள்ளியிலுள்ள சிறு வயது குற்றவாளிகள் போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட தியானம் மற்றும் யோகா பயிற்சி அவர்களின் உடல் மற்றும் அறிவாற்றல் அழுத்தத்தால் தூண்டப்பட்ட எதிர்மறை உணர்வுகளை குறைத்தன.
முடிவுகள்:
தியானப் பயிற்சிகள் இரத்தத்தில் செரோடோனின் (மனநிலையை சமன் படுத்தும் ஹார்மோன்) அளவு, பிளாஸ்மா டோபமைன் (சந்தோஷத்தை தரும் ஹார்மோன்) இவற்றின் அளவுகளை அதிகரித்து மனஅழுத்தத்தை குறைக்கிறது.அனைத்து ஆய்வுகளிலும், பல்வேறு வகையான அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொண்ட யோக மற்றும் தியானப் பயிற்சிகளுக்குப் பிறகு அவர்களின் மனநலனில் நல்ல முன்னேற்றம் இருந்தது.
இருப்பினும், அதிர்ச்சி மற்றும் அது சார்ந்த மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளில் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் பற்றிய ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
குறிப்பு:
நியூரோஎண்டோகிரைன் என்பது உடலில் உள்ள ஹார்மோன் செயல்பாடுகளை மூளை கட்டுப்படுத்தும் அமைப்பாகும். இவற்றில் செரிமானம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இரத்த ஓட்டம் போன்றவை அடங்கும்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க - https://en.thunai.org/service/Managing-Mental-Health-Disorders-Resulting-from-Trauma-through-Yoga/122