மன அழுத்தத்தை உணரும் போது கடைப்பிடிக்க வேண்டிய 3 வழிமுறைகள்:
உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் போது கவனிக்க வேண்டியது
பதட்டமான தசைகள், அதிக சோர்வு, தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி போன்றவைகள் தோன்றும் போது உடல் தரும் எச்சரிக்கைகளை கவனிக்கவும். சோர்வாக அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கும் நீங்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களுக்கும் இடையிலான தொடர்பை உருவாக்க முயற்சிக்கவும்.
காரணங்களை அடையாளம் காணவும்
உங்கள் மன அழுத்தத்திற்கான காரணங்களை மூன்று வகைகளாக வரிசைப்படுத்தவும்
ஒரு நடைமுறை தீர்வு உள்ளவை.
காலம் மாறும் போது அதுவும் நல்ல விதமாக மாறுவது.
சிலவற்றிற்கு உங்களால் எந்த மாற்றமும் செய்ய முடியாதவை.
(2) மற்றும் (3) ல் உள்ளவைகள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இதை நீங்களே உங்களுக்கு ஆணித்தரமாக கூறிக் கொண்டு அந்த எண்ணங்களை கைவிடுங்கள்.
உங்கள் வாழ்க்கை முறையை மதிப்பாய்வு செய்யவும்
உங்களால் முடிந்ததற்கு மேலும் பளுவை சுமக்கிறீர்களா?
வேறொருவரால் செய்யக்கூடிய விஷயங்களை நீங்களே செய்கிறீர்களா?
இந்த கேள்விகளுக்கான விடைகள் - நீங்கள் அடைய முயற்சிக்கும் விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து உங்கள் வாழ்க்கையை மீண்டும் ஒழுங்கமைக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்ய முயற்சிப்பதால் ஏற்படக்கூடிய அழுத்தத்தை வெளியிட இது உதவும்.
மன அழுத்தத்திலிருந்து உங்களை பாதுகாக்க 7 வழிமுறைகள்:
ஆரோக்கியமான உணவு: உணவு நம் மனநிலையை எவ்வாறு பாதிக்கிறது, ஆரோக்கியமாக சாப்பிடுவது இதை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதைக் காட்டும் ஆதாரங்கள் பெருகி வருகின்றன. உங்கள் உணவில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நீர் போன்ற மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு வழங்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் உங்கள் நல்வாழ்வை நீங்கள் பாதுகாக்க முடியும்.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துத்தலை நிறுத்துவது இல்லையெனில் குறைத்து கொள்வது – இவை தற்காலிகமாக பதற்றத்தை குறைத்தாலும், இவைகளின் பழக்கம் பிரச்சனையை பெரிதாகவே ஆக்கும்.
உடற்பயிற்சி – வீட்டிற்கு வெளியே சென்று நல்ல காற்றை சுவாசிப்பது, சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வது, அல்லது கடைகளுக்கு சென்று வருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஓய்வு எடுக்க நேரம் ஒதுக்கவும் - சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது சரியா என்று நீங்களே கூறிக் கொள்ளவும். இது பல வடிவங்களை எடுக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்களால் முடிந்தால் உடற்பிடிப்பு செய்து கொள்ளலாம், அல்லது தியானம் மற்றும் அடிப்படை உடற்பயிற்சிகளைப் செய்யலாம்.
கவனமாக இருக்கவும் - கடினமான சூழ்நிலைகளை நிர்வகிப்பதற்கும், புத்திசாலித்தனமான தேர்வுகளை செய்வதற்கும் நமது திறனை அதிகரிக்கும் வகையில் நமது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு கவனம் செலுத்துவது இதில் அடங்கும். இந்த மனப்பாங்கை கைக்கொள்ள செய்ய முயற்சி செய்யுங்கள்.
நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுங்கள்- நீங்கள் மன அழுத்தத்தை அனுபவிக்கும் போது தூக்கம் ஒரு போராட்டமாக இருக்கும்போது, படுக்கைக்கு முன் காஃபின் தவிர்த்து, உங்கள் அறையிலிருந்து எல்லா சாதனங்களையும் அகற்றி, தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருப்பதன் மூலம் உங்கள் தூக்கத்திற்கான ஒழுங்கு முறையை மேம்படுத்த முயற்சி செய்யலாம்.
நீங்களே உங்களின் சிறந்த நண்பராக இருப்பதைப் போல நடந்து கொள்ளுங்கள்- நீங்களே உங்களுக்கு ஆதரவாக இருங்கள். நீங்கள் எதிர்மறையான சுய பேச்சில் ஈடுபடும்போது அதை அடையாளம் காணுங்கள். இந்த எண்ணங்கள் உண்மையாக இல்லாததென்றால் அவற்றை சவால் செய்யுங்கள். உங்களின் மேலே மிகவும் கடினமாக இருக்க வேண்டாம்.
உதவியையும் ஆதரவையும் நாடுங்கள் மன அழுத்தம் என்பது வேலை, குடும்பம், உறவுகள் மற்றும் பணப் பிரச்சினைகள் போன்ற வாழ்க்கையின் பல சூழ்நிலைகளுக்கு இயல்பான எதிர்வினையாகும். மிதமான அளவு மன அழுத்தம் சவாலான சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட உதவினாலும், அதிக அல்லது நீடித்த மன அழுத்தம் பல உடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதில் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான மற்றும் குடல் சிரமங்கள் ஆகியவை அடங்கும். உதாரணமாக, எரிச்சல் உள்ள குடல் நோய்க்குறி (ஐ.பி.எஸ்), மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சினைகள் அடங்கும். ஆகவே, நம் உடலுக்கும் மனதுக்கும் நீண்டகால சேதத்தைத் தடுக்க, நம் மன அழுத்தத்தை நிர்வகித்து ஆரோக்கியமான வகையில் வைத்திருப்பது முக்கியம்.
மன அழுதத்தை எதிர் கொள்ள உதவி கேட்பதில் தவறில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் சொந்தமாக நிர்வகிக்க சிரமப்படுகிறீர்கள் என்று உணர்ந்தால், உதவியை நாடுங்கள். நீங்கள் நலம் பெற தகுதியானவர்.