நீங்கள் ஓய்வில்லாமல் பரபரப்பாக இருப்பதனால் உங்களையே புறக்கணிக்கிறீர்களா? அப்படி என்றால், நீங்கள் தனியாக இல்லை. நம்மில் பலர் நம்முடைய தேவைகளை புறக்கணித்து விட்டு மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை முதல் குறிக்கோளாக கொண்டு வாழ்க்கையில் பரபரப்பாக இருக்கிறோம். மற்றவர்களின் மீது காட்டும் இரக்கமும் அக்கறையும் அற்புதமான பண்புகள் தான் என்றாலும் நம் சுய தேவைகள் மிகவும் குறைந்து நாம் சோர்ந்து விடுவதோடு முடிவில் நமக்கு அதனால் ஒரு நன்மையும் இல்லை என்பதே உண்மை.
உங்கள் வாழ்க்கையில் உங்களை முன்னுரிமையாக்குவதற்கான சில வழிகள்:
1. ஓவ்வொரு நாளும் சீக்கிரமே எழுந்து ஒரு நோக்கத்துடன் துவக்குங்கள். அது மிகவும் முக்கியம் - காலையில் கண் விழிக்கும் போது நாம் மன சோர்வுடன் இருக்கப் போகிறோமா? அல்லது அமைதியைக் கடைப்பிடிக்க போகிறோமா? என்ற தேர்வை செய்ய வேண்டும். அதிகாலையில் விழிப்பது மிகவும் கடினமான செயலயாக தோன்றினால், அதற்கு அலாரத்தில் உள்ள snooze பொத்தானை தவிர்த்திடுங்கள். அதிகாலையில் எழுந்திருப்பவர்கள், மிகவும் நம்பிக்கை மற்றும் நேர்மையுடன் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் வல்லவர்கள். அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், “நான் தொலை நோக்கு இலக்குகளை அடையாளம் காண்பதில் நேரம் செலவிடுகிறேன்”, “எனக்கு சில விஷயங்களை செய்து முடிப்பதில் ஆர்வம் இருக்கிறது” என்ற வாக்கியங்களை அதிகம் உபயோகிக்கின்றனர் என ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிஞர் கிறிஸ்டோபர் ராண்ட்லர் கண்டு பிடித்துள்ளார்.
திரு. ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் ஊக்குவிக்கும் கூற்று – “கடந்த 33 வருடங்களாக தினமும் காலையில் எழுந்து நான் என்னையே பார்த்து கேட்டு கொள்வது: இன்று தான் எனக்கு கடைசி நாள் என்றால், நான் இன்று என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ அதை செய்வேனா? நிறைய நாட்களுக்கு அதற்கு பதில்... இல்லை ...என்று தோன்றினால், அப்போது அதன் அடிப்படையை மாற்ற வேண்டும் என்பது தெளிவாகும்”.
2. உங்கள் எண்ணங்களை சரி பார்க்கவும் - அவை உங்கள் செயல்களாகின்றன – சாதாரண மெய்யறிவு, நம் உணர்வுகள் நம் எண்ணங்களை கட்டுப்படுத்துகின்றன என்று கூறுகிறது. ஆனால் அதற்கு நேர் மாறாக நம் எண்ணங்கள் நம் உணர்ச்சிகளை முந்துகின்றன. நம் எண்ணங்கள் மிகவும் சாதாரணமாகவும், அவசரமானதாகவும், தன்னிலையற்றதாகவும் இருப்பதற்கு காரணம் நாம் மிகவும் குழம்புவதால் தான். கவனத்துடன் இருப்பதன் அழகு நம் எண்ணங்கள் நம்மை கட்டுப்படுத்தாமல் நாம் அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்த கற்றுக் கொள்கிறோம் என்பதே ஆகும்.
3. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குதல் – உடற்பயிற்சி செய்வதினால் சுறுசுறுப்பு மட்டுமல்லாமல், மகிழ்ச்சி தரக் கூடிய செரடோனின் என்னும் ஹார்மோனை வெளியேற்றி, மன அழுத்தத்தை குறைத்து தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. மேலும் உடற்பயிற்சி செய்வதால் அதிக எச்சரிக்கையுடனும், உற்பத்தி மற்றும் படைப்பாற்றல் திறனும் நாள் முழுவதும் அதிகரிக்கின்றன.
4. எதற்கு இல்லை என்று சொல்ல வேண்டுமோ அதற்கு ஆணித்தரமாக இல்லை என்று சொல்லுங்கள் - எல்லைகள் சுய பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சிக்கான திறவுகோலாகும். சிலர் பிறரை மகிழ்விப்பதற்காக தங்கள் நேரம் மற்றும் வளங்களுக்கு வரம்புகளை நிர்ணயிப்பதில் தடுமாறுகின்றனர். ஒரு விஷயத்திற்கு இல்லை என்று கூறுவதால் வேறு ஒரு விஷயத்திற்கு ஆமாம் என்று கூறுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
5. நீங்கள் விரும்பும் ஒருவருடன் தொடர்பில் இருங்கள் – மனிதனாக பிறந்ததே பிறருடன் தொடர்பில் இருக்கத்தான். தனிமை நம் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் பேரழிவு விளைவுகளைப் பற்றி ஆய்வுகள் ஏராளமாக உள்ளன. Perspectives on Psychological Science என்னும் பத்திரிக்கையில் தனிமையினால் 26% மரணங்கள் நிகழும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்ற ஆய்வு முடிவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நல்ல செய்தி என்னவென்றால், மன அழுத்தத்தை குறைக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும், நம் வாழ்விற்கு அர்த்தம் அளிப்பதன் மூலமும் உறவுகளை மேம்படுத்த முடியும் என்பதையும் அந்த ஆராய்ச்சி காட்டுகிறது.
6. மெதுவான, ஆழமான சுவாச பயிற்சி செய்யுங்கள் - அமைதியாக இருக்க உங்களுக்கு உதவுவதோடு, பயத்தினால் உண்டாகும் தாக்குதல்களுக்கு எதிராக சுவாசம் சிறந்த தற்காப்பு ஆயுதமாகும். அவசரகால மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, மார்பு வலி தொடர்பான புகார்களுடன் அவசர அறைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளில் 30% (மார்பு நோய் ஏற்கனவே இல்லதவர்கள்) அதிக மன பயத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.
7. உண்மையாக செயல்படுங்கள் – உண்மையை ஒப்புக் கொள்வதே சிகிச்சையின் முதன்மை குறிக்கோளாகும். அது வேதனையை அதிகரித்து குழப்பத்தை ஏற்படுத்தினாலும், நீங்கள் சொல்ல நினைப்பதை தெளிவாக கூறி அதன் படி நடந்து கொண்டால் அதை விட இலகுவாக வேறு ஒன்றும் இருக்க முடியாது.
8. மன நல கணிப்புகளை கவனத்தில் கொள்ளுங்கள் - முரட்டுத்தனமான நடத்தை அனைத்து ஆளுமைப் பண்புகளை விட (personality traits) மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. நாம் அனைவருக்கும் அவ்வப்போது கோபத்தையும் அநீதியையும் உணர உரிமை உண்டு என்றாலும், நமது உணர்ச்சிகள் மற்றும் செயல்களுக்குப் பொறுப்பேற்பது ஆரோக்கியமான மனநிலையைப் பின்பற்றுவதற்கான ஒரு முக்கியமான படியாகும்.
9. அன்பாக இருங்கள் – அதற்கு ஒரு துளி பணம் கூட செலவழிக்க வேண்டாம்.
10. சிரிக்கவும் – ஆரோக்கிய உணர்ச்சிகளுக்கு நகைச்சுவை உணர்வு மிகவும் அவசியம். சிரிப்பதனால் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி பலப்படுகிறது, ஆற்றல் அதிகரிக்கிறது, வலி குறைந்து, மன அழுத்தத்தின் நச்சு விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நகைச்சுவை வேடிக்கையானது, இலவசமானது மற்றும் கண்டுபிடிக்க மிகவும் எளிதானது!