குழந்தை பிறக்க போகிறதை நினைத்து ஏன் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை? கருவுற்ற காலத்திலும் குழந்தை பிறந்த பின்னும் எல்லா பெண்களும் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறார்கள்?
சில சமயங்களில் நான் கருவுற்றதை எண்ணி மகிழ்கிறேன். ஆனால் சில சமயங்களில் மனதில் சில சந்தேகங்கள் எழுகின்றன. என் உடலில் ஏற்படும் இத்தனை மாற்றங்களை தாங்கிக்கொள்வது சரியானதுதானா? என் பழைய உடல் திரும்ப கிடைக்குமா? என் கணவருக்கு என்னை பிடிக்குமா?
குழந்தை பிறந்த பின் என் வழக்கையே முழுவதுமாக மாறிவிடுமா? என் கணவர் எனக்கு உதவுவாரா?
சில சமயங்களில் மிகவும் தவறான சிந்தனைகள் எழுகின்றன. எனக்கு குழந்தையை பிடிக்குமா? குழந்தையை பெற்றதற்கு வருந்துவேனா?
ஆழ்ந்த மூச்சைவிட்டு அமைதியாக இருங்கள். நிறைய பெண்களுக்கு இந்த மாதிரியான சிந்தனைகள் வருவது இயல்பே. கருவுற்ற காலம் ஒரு பெண்ணிற்கு உடல் உள்ளம் மற்றும் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலம் ஆகும்.
உங்களை நிந்தித்துக்கொள்ளாதீர்கள். குற்ற உணர்வோ வெட்கமோ பட வேண்டாம்.
ஆனால் புரிந்துகொள்ளுங்கள் இந்த மாதிரியான தேவையற்ற சிந்தனைகளால் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதிப்புண்டாக வாய்ப்புள்ளது. இது தொடர்ந்தாலோ, வேறு சில வாழ்க்கை பிரச்சனைகளால் கவலையோ அழுத்தமோ ஏற்பட்டால் அது மனசோர்வுக்கு வழிவகுக்கும்.
இந்த மாதிரியான சிந்தனைகள் சில அடிப்படை காரணங்களால் ஏற்படுகின்றன. உங்களின் குழந்தை பருவம் (இனிமையற்றதாக இருந்திருக்கலாம்) அல்லது மற்றவர்களை பார்த்திருக்கலாம் (உங்கள் தாயையும் சேர்த்து ). சில கண்டறிய முடியாத காரணங்களாகவும் இருக்கலாம். மருத்துவ ஆலோசகரிடம் பேசி கண்டறியலாம்.
இந்த சிந்தனைகளை எப்படி தடுக்கலாம்- துணை நடத்தும் தாய்மார்களுக்கான ஆதரவு அமர்வுகளில் சில வழிமுறைகளை கற்றுக்கொள்ளலாம். அமைதியாக இருங்கள்.
1 . உங்கள் மனநிலை மாற்றத்தையும் அடிக்கடி வரும் சிந்தனைகளையும் தெரிந்துகொள்ளுங்கள் (விழிப்புணர்வு)
2 . உங்களை மதிப்பிடாமல் உங்களின் சிந்தனைகளை ஒருமுக படுத்த பழகிக்கொள்ளுங்கள்.
3 . இந்த காலகட்டத்தில் உங்களின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். (சுய அக்கறை)
4 . குடும்பத்தினரின் உதவியை பெறுவது எப்படி? எப்படியெல்லாம் சமூகத்தின் ஆதரவை பெற முடியும்? (உற்றார் உறவினரின் ஆதரவு)
ஒரு எளிய பரிசோதனை முறையை கொண்டு உங்களின் மருத்துவ ஆலோசகர் கண்டறிந்து முறையான ஆலோசனையை வழங்குவார்.