குழந்தையாக நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறேனா?
பாதிப்பிலிருந்து மீண்டவர்களில் சிலர் எப்போதும் தங்கள் அதிர்ச்சியினை நினைவில் வைத்திருப்பார்கள். அது எப்படி தங்களை பாதித்தது என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். அவை அவர்களுடைய ஞாபகத்தில் வந்து அலைக்கழிக்கும். அவர்கள் வலி, குழப்பம் மற்றும் குழந்தையாய் இருக்கும்போது அனுபவித்த தனிமை ஆகியவற்றோடு வாழ்வார்கள். அவர்கள் மேலும் பயங்கர கனவுகள் மற்றும ஃப்ளாஷ் பேக்ஸ்( கடந்த காலத்தில் இருந்து திடீரென அந்த ஞாபகத்தை மீண்டு அனுபவித்தல்) மற்றவர்கள் பய தாக்குதல்கள், வினோதமான உடல் உணர்வுகள் மற்றும் பயங்கள், வலிகள், சில விவரிக்க முடியாத துயரங்கள் ஆகியவற்றோடு வாழ்வார்கள்.
அவர்களுடைய உடம்பு அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஞாபகத்தில் வைத்திருக்கும். பலர் அந்த அதிர்ச்சியின் தொடர்புடைய உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றை அடிக்கடி நினைவில் கொண்டு மீண்டு வாழ்வார்கள். பலர் இந்த அறிகுறிகளை தங்கள் சிறுவயது அதிர்ச்சி மற்றும் துன்புறுத்தலுக்கு தொடர்பு என்று எடுத்துக் கொள்ளாமலும் இருப்பார்கள்.
மற்றவர்கள் அந்த துன்புறுத்தலையோ, அந்த அதிர்ச்சியையோ திரும்ப நினைவில் கொண்டு வர முடியாதவர்களாக இருப்பார்கள். சிலர் அவர்கள் அனுபவத்தில் சிலதை மட்டுமே நினைவில் வைத்திருப்பார்கள். மேலும் சிலர் அவர்களுடைய அனுபவத்தை அதிர்ச்சி என்றோ துன்புறுத்தல் என்றோ எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சிலர் அதனை மறுப்பார்கள் அல்லது குறைத்து சொல்வார்கள். உதாரணமாக "அது ஒரு முறை தான் நடந்தது" அல்லது "அதில் அப்படி ஒன்றும் பிரச்சனை இல்லை".
குழந்தைப்பருவ அதிர்ச்சி என்பது ஒருவருடைய வாழ்க்கையின் பல பகுதிகளை பாதிக்கக்கூடும். அவர்களுடைய வாழ்க்கையின் தரத்தையே மாற்றி விடக்கூடும். தனக்கு என்ன நடந்தது என்று புரிந்துக்கொள்ள முடியாத வயதிலிருப்பவர்களுக்கும் கூட இது நடக்கலாம். இது தினசரி வேலைகளான சாப்பிடுதல், தூங்குதல், வேலை செய்தல் மற்றும் படித்தல் ஆகியவற்றைக் கூட மிகவும் கடினமானதாக ஆகிவிடும். இது ஒருவருடைய மனநலம், உடல்நலம் மற்றும் உறவுகள் இவை அனைத்தையும் பாதிக்கும்.
எப்படி ஒரு சிறு வயது அதிர்வு மனிதர்களை பாதிக்கும் என்பதற்கான விளக்கங்கள்:
உணர்வுகள் மேல் பாதிப்பு:
பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் அவர்களுடைய உணர்வுகளை தொடர்புகொள்ள மிகவும் சிரமப்படுவார்கள். அடிக்கடி அவர்களுடைய உணர்வுகள் மற்றும் எதிர்வினைகள் குறித்து எந்தவிதமான விளக்கமும் தர முடியாமல் குழப்பம் அடைவார்கள். குழந்தையாய் இருந்தபோது அவர்கள் தங்களுடைய இயலாமையை பற்றி விளக்க முயன்று அதற்காக தண்டனை அடைந்து இருப்பார்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்கள் அல்லது புறக்கணிக்கப்பட்டு இருப்பார்கள்.
அதன் விளைவு இவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய எதிர்மறை உணர்வுகளை, உதாரணமாக (பரிகாச உணர்வோ, கோபமோ) அவர்கள் பால் அதாவது உட்பக்கமாக செலுத்தி விடுவார்கள். பெரியவர்களானதும், இவர்கள் பல நேரங்களில் மிக மிக அதிக அளவில் இந்த உணர்வுகளை அனுபவிப்பார்கள். இதில் கவலை, துயரம், வருத்தம், பரிகாசம், குற்றம், அதிகாரம் இல்லாமல் இருத்தல் ஆகியவை அடங்கும்.
பெரும்பாலும் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் அதிக அளவில் மன அழுத்தத்தில் இருப்பார்கள். இது நிச்சயம் சரியாகாது என்ற நினைப்பிலேயே இருப்பார்கள். பலர் மது, போதைப் பொருள்கள், பாலியலுறவு, சூதாட்டம் ஆகியவற்றை தங்களுக்கு ஒரு விடுதலையாக கருதுவார்கள். சிலர் தங்களையே துன்புறுத்திக் கொள்வார்கள். இந்த எல்லா வகையான சமாளிப்பும், முயற்சிகளும் நிச்சயமாக நீங்கள் சிறுவயதில் துன்புறுத்தப்பட்டு இருக்கிறீர்கள் அல்லது அதிர்ச்சியடைந்து இருக்கிறீர்கள் என்பதற்கான ஒரு முக்கியமான சாட்சியாக இருக்கும்.
உணர்வுகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, உணர்வுகள் என்றால் என்ன? எங்கிருந்து வருகின்றன? அவற்றுக்கு எதிர்வினை ஆற்றுவது எப்படி? என்று தெரிந்துகொள்வது, உதவி செய்யும். காலம் செல்லச் செல்ல பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் புதிய பலனளிக்கக் கூடிய வழியில் தங்களுடைய கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகளை சீர் செய்ய உதவும். அதுபோல செய்யும்போது அவர்களுக்கு மதுவும், போதைப் பொருட்களும் அல்லது தங்களை துன்பப்படுத்தி ஒரு விஷயத்தை தெரிவிப்பது அல்லது உணர்வுகளை மழுங்கடித்து கொள்வதோ தேவையில்லை.
உறவுகள் மேல் ஏற்படுத்தும் தாக்கம்:
பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மற்றவர்களை நம்புவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இவர்கள் நம்பிக்கை துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள். மீண்டவர்கள் அதிகளவில் உறவுகளை சிரமமாகவே நினைப்பார்கள். இதில் அவர்கள் , தங்கள் மேல் வைத்துள்ள உறவும் அடங்கும்.
துன்புறுத்தலும், புறக்கணிப்பும் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் என்ன அர்த்தத்தை தெரிய வைக்கிறது என்றால் "நீங்கள் உபயோகமானவர்கள் அல்ல " மற்றும் "உங்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது" என்பதுதான்.
குழந்தைகள் இந்தச் செய்தியினை தங்கள் மனதின் ஆழத்தில் சென்று பதித்து விடுகிறார்கள். பெரும்பாலான பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மிகக்குறைவான சுய கௌரவத்தையும் மற்றும் மிகக் குறைவான சுய நம்பிக்கையையும் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களையே குறைபாட்டிற்காக சுட்டிக் காட்டிக் கொள்வார்கள். நிறையபேர் மிக உறுதியான பரிகாச உணர்வினை உணர்வார்கள். இது நல்ல ஒரு ஆதரவான மற்றும் ஆரோக்கியமான உறவினால் மாறும். மாற்றம் என்பது படிப்படியாகவே அமையும். மேலும் ஆரோக்கியமான உறவுகள் நீடிக்கும். மாற்றம் என்பது மிக மெதுவாய் முன்னேறும் காலத்தின் பாதையில் அது நிகழும். ஆனால் அது உண்மை.
உடல் நலத்தின் மீது தாக்கம்:
சிறுவயது துன்புறுத்தல் மற்றும் அதிர்வு, உடலையும் மற்றும் மனதையும் பாதிக்கிறது. இதனால் இந்த மன அழுத்தத்திற்கு எதிர்வினையானது, உடலில் எப்போதும் தயார் நிலையிலே இருக்கும். இது உணர்வுகளின் எழுச்சியை தூண்டி விடும். ஆகையால் தூங்குவது சிரமமாகிவிடும். இது நமது நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யும் விதத்தையும் பாதிக்கும். இந்த பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு அதிகமான அளவில் உடல் நலம் சரியில்லாமல் போகின்ற வழியினை தூண்டிவிடும்.
இதில் அதிக அளவு வலி, கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட கோளாறுகள், ஜீரண உறுப்பு பிரச்சனைகள், மலச்சிக்கல், நீரிழிவு, எலும்பு புரை நோய், தலைவலி, ரத்த நாள கோளாறுகள், மிக அதிக அளவில் சோர்வடையச் செய்யும் தன்மை ஆகியவைகள் அடங்கும். இதில் மீண்டவர்களுக்கு அதிக அளவில் புகை பிடித்தல் பழக்கம் இருக்கும், மது அருந்தல் இருக்கும், அடிமைபடுவார்கள் மற்றும் மிகக் குறைந்த அளவிலேயே உடல் உழைப்பை செய்வார்கள். இந்த சமாளிப்பு முறைகள் எல்லாமே வருங்கால வாழ்க்கையை பாதித்து உடல்நல பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.