தாயின் கருவில் இருக்கும் போது குழந்தையின் மூளை வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். கருவுற்ற காலத்தில் தாய் மிகவும் கவலையுடன் இருப்பதாலும், அதிர்ச்சியளிக்கும் நிகழ்ச்சிகளாலும் குழந்தை பிறக்கும் போதும், வளரும் போது குழந்தையின் மன நிலை மற்றும் நடவடிக்கைகள் பாதிப்படையும் வாய்ப்புகள் அதிகம்.
தாயாக நினைக்கும் பெண்களுக்கு மனநிலை மாற்றங்கள் ஏற்படும் போது கருவுறும் தன்மை குறைகிறது. எனவே கருத்தரிப்பு மையங்கள். தங்களிடம் சிகிச்சைக்கு வருபவரின் மனநிலை மாற்றங்களை கண்காணிக்க வேண்டும்.
பேறுகாலத்தில் ஏற்படும் துயரத்தால் ஒரு பெண் தன்னை சரியாக கவனித்துக்கொள்ளாதது. எடை குறைவான குழந்தை பிறத்தல், குறை பிரசவத்தில் குழந்தை பிறத்தல் ஆகியவை நிகழ வாய்ப்புள்ளது.
குழந்தை பிறந்த பின் மனஅழுத்தம் அல்லது துயரம் இருந்தால் அந்த தாய் தன் குழந்தையுடன் சரியான பிணைப்பு ஏற்படுத்தி கொள்ளமாட்டாள். குழந்தையை அறவே தவிர்ப்பாள். அந்த சமயத்தில் தாய்க்கு ஆதரவாக இருந்து அவளை மகிழ்ச்சியாக வைக்க உதவ வேண்டும். சரியான தூக்கம் இல்லாததாலும். பேறுகாலத்திற்கு பின் ஏற்படும் மனா அழுத்தத்தாலும் இந்த நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. குழந்தையுடன் பிணைப்பு இல்லாமல் இருந்தால் அது வளரும் போது குழந்தையின் மனநிலையை வெகுவாக பாதிக்கும்.
தாயின் மனநிலைக்கும் குழந்தயின் அறிவாற்றலுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தாய் அல்லது தந்தையின் மனா அழுத்தம் குழந்தையின் நரம்பு மண்டல (நியூரோ மோட்டார்) வளர்ச்சியை பாதிப்பதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
ஆபத்துகளையும் அதனால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகளையும் முழுவதுமாக தவிர்க்கமுடியாது. இத்தகைய ஆபத்துகளை கண்டறிந்து அவற்றிற்கு தேவையான வழிகாட்டுதல்களை அளித்து, எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சியை மேம்படுத்த முழு முயற்சியை மேற்கொள்வதே துணையின் குறிக்கோளாகும்.