சில நேரங்களில் உங்களுடைய நெருக்கமானவர்களால் அவர்களுடைய கடினமான தருணங்களில் அவர்கள் உங்களை தாக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கலாம். நீங்கள் உங்களுடைய மனதினை நல்ல நிலைமையில் வைத்துக்கொள்வதற்கு, இவற்றை உங்கள் மனதிற்கு நேரடி தாக்குதல் போல எடுத்துச் செல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். இந்தத் தாக்குதல் உடல் வழி தாக்குதல் ஆகவோ அல்லது தவறான வார்த்தை துஷ்பிரயோகங்கள் ஆகவும் இருக்கும் பட்சத்தில் உங்கள் குடும்பத்தில் இருந்து நீங்கள் உதவி கேட்டு யாரையாவது ஒருவரை அழைத்தல் நல்லது. சில சமயம் நண்பரையோ அல்லது காவல்துறை உதவியையும் நாட வேண்டி வரலாம்.
ஒவ்வொரு மன குறைபாடும் மற்ற உடல்நலக் குறைபாடு போலத்தான். அவற்றுக்கென தனிப்பட்ட அறிகுறிகள், ஒவ்வொரு காலக்கட்டங்களில் மாறுபடும் வெளிப்பாடு, இவை எல்லாவற்றையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தரும் நேரத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த அறிகுறிகளை புரிந்து நடக்கும்போது பிரச்சனைகளை மிக எளிதாக வழங்க முடியும்.
உதாரணமாக, மனக்கவலை குறைபாடு உடையவருக்கு கவனம் செலுத்துதலில் சிரமம் இருக்கலாம் அல்லது மிகவும் சோர்வாகவும் இருக்கக்கூடும். சில விஷயங்களால் அவர் வெறுப்படைந்து, அல்லது பொறுமை இழந்து கற்பதற்கு சிரமப்பட வைக்கும். அதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்த குறைபாடு( P.T.S.D) உள்ளவர்கள், நிகழ்காலத்தில் தொடர்ந்து இருப்பது மிகவும் சிரமமான ஒன்று. தற்போது இருக்கும் மன நிலைமையில் அவர்களுக்கு எதிர்மறை மாற்றங்கள் அடிக்கடி ஏற்பட்டு குழப்பமான மன நிலையில் அவர்கள் இருக்கக்கூடும் அல்லது மறதி ஆகியவை அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும்.
இவை எல்லாமே ஒரு காய்ச்சலின் போது ஏற்படும் உடல் நடுக்கம் மற்றும் வாந்தி எடுத்தல் போன்றவை தான். இவற்றை உடனடியாக கட்டுப்படுத்த இயலாது. ஆனால், இந்த நடத்தை மாற்றங்களை மற்றும் நிகழ்வுகளை நாம் அப்படியே ஏற்றுக் கொண்டால், இதனை கையாள்வது சுலபமாகிவிடும். இது சரியாக கையாளப்படாத பட்சத்தில் தனிமைப் படுத்திக் கொள்ளுதல், தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளுதல், குழப்பம் மற்றும் அவமானம் போன்றவை ஏற்கனவே இருக்கும் அவர்களின் குறைபாடோடு சேர்ந்து கொள்ளும்.
எப்படி ஒரு வரைபடம் சாலையோரத்தில் இருக்கும் ஒவ்வொரு மரங்களையும் சுட்டிக்காட்டாது. அதுபோலவே ஒரு மனிதனுடைய தனிப்பட்ட குணாதிசயங்களை ஒரு மருத்துவ ஆய்வு சுட்டிக்காட்ட இயலாது. எனவே இது போன்ற ஒரு பிரச்சனையை கையாளும் மனிதராக இருப்பது மிகக் கடுமையான ஒன்றாகும். ஒரு ஆதரவளிக்கும் மனிதராக நீங்கள் கடந்து சென்று கொண்டிருப்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியும். உங்களுக்கு இருக்கும் குறைபாடுதான், இந்த நடத்தை மாற்றங்களையும் அறிகுறிகளையும் உருவாக்குகிறது.
இது உங்கள் தேர்வல்ல. ஆகவே, நீங்கள் இதனை எந்த ஒரு மனிதருடனும் இணைத்து பார்க்க வேண்டிய தேவை இல்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு மற்றும் அவருடைய இணையர்களுக்கு இந்த மனநிலை மிகமிக அவசியம். ஏனெனில், அவர்களுடைய ஆதரவு இந்த நோயிலிருந்து மீண்டு வர போராடிக்கொண்டிருக்கும் அவருக்கு மிகவும் முக்கியம். உதவி தேவைப்படும் போது, உடனே அதற்கு சரியான உதவி மையங்களை நாடுங்கள்.