"நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்" என்று நாம் எத்தனை முறை தந்தையை பார்த்து கேட்டுள்ளோம்?
அவர் நலமாக உள்ளதாக நாமாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால் சிந்தித்து பார்த்தால் அவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முயற்சிப்பது புரியும். அவருக்கு பணப்பிரச்சனை குறித்து கவலையாக இருக்கலாம், அவரது குடும்பத்தினர் அவருக்கும் அவரது மனைவிக்கும் பிடிக்காத சிலவற்றை செய்ய கட்டாயப்படுத்தலாம், அவருக்கு எப்போதேனும் மனநல கோளாறு ஏற்பட்டிருக்கலாம். இவை எதுவும் இல்லை என்றாலும் அவர் சோர்வுடன் காணப்படலாம்.
மார்க் வில்லியம்ஸ், டாக்டர் ஜென் ஹன்லி என்பவர் தந்தையிடம் சில கேள்விகள் கேட்க வலியுறுத்துகின்றனர்.
குழந்தை பிறந்தவுடன் நீங்கள் அதிகமாக மதுஅருந்துகிறீர்களா?
ஒரு தந்தையாக எப்படி உணர்கிறீர்கள்.
யார் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்? உங்கள் மனைவி சோர்வுடனோ அல்லது மன அழுத்திலோ இருக்கிறாரா?
உங்களால் சரியான நேரத்திற்கு தூங்க முடிகிறதா?
உங்களின் உடல் எடை கூடுகிறதா?
முன்பைவிட இப்பொழுது அதிகமாக கடினமான சூழ்நிலை அல்லது பேச்சுவார்த்தைகளை தவிர்க்கிறீர்களா?
உங்களுக்கு அதிக கோபம் அல்லது ஆக்ரோஷமாக உணர்கிறீர்களா?
இபிடிஸ் என்னும் முறை தந்தைக்கும் பொருந்தும் விதமான பரிசோதனைகளை கொண்டுள்ளது.
மேலும் தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது (மார்க் வில்லியம்கு நன்றி)