ஒரு குடும்ப உறுப்பினராக, அன்பான கணவராக, தாய்க்கு எப்படி பக்கபலமாக இருப்பது என்று யோசிக்கிறீர்களா?
இப்பொழுது உங்களுக்கு சில தகவல்கள் தெரிந்திருக்கும்
1 . வாழ்க்கையின் மகிழ்ச்சிகரமான தருணமாக கருதப்படும் கருவுற்ற காலங்களில் ஒரு தாய்க்கு வேதனை தரும் சிந்தனைகள் ஏற்படுவது இயல்பான ஒன்றே.
2 . தேவையற்ற சிந்தனைகளால் எந்த பயனும் இல்லை என்றும் அதனால் குழந்தை பாதிப்படையும் என்றும் அவருக்கு புரியவையுங்கள்.
3 . ஒரு தாய் ஆரோக்கியமுடனும் நம்பிக்கையுடனும் இருந்தால் அது அவரின் அடுத்த தலைமுறையையும் ஆரோக்கியமானதாக இருக்க உதவும்.
நீங்கள் எப்படி அவருக்கு பயனுள்ளவராகவும் ஆதரவாகவும் இருக்க முடியும் என்று கேளுங்கள்.
ஒரு கணவராக தாய்க்கு தேவையானதை கொடுங்கள்
1 . தனக்கென்று நேரத்தை ஒதுக்க சொல்லுங்கள்- யோகா வகுப்புகள், மன அழுத்தத்தை குறைக்கும் உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவு மற்றும் உறக்கம்.
2 . அவளின் உடல் மாற்றம் அழகானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது என்று கூறி ஊக்கப்படுத்துங்கள்.
3 . வீட்டில் என்றும் ஆனந்தமும் அமைதியும் நிறைந்திருக்க உதவுங்கள். அதாவது உங்களின் கவலைகளையும் அழுத்தத்தையும் சமாளித்துக்கொள்ள தெரிந்துகொள்ளுங்கள் (உங்களுக்கும் இது கடினமான நேரமாகத்தான் இருக்கும்). தேவையற்ற குடும்ப சிக்கல்களில் இருந்து (குழந்தையின் பாலினம் மற்றும் உங்களுக்கு பிடிக்காத சடங்குகளில் இருந்தும்) அந்த தாயை காப்பாற்றுங்கள்.
4 . அவளின் மனநிலை மாற்றங்களை அமைதியாக கையாளுங்கள். மனநிலை அட்டவணையை பூர்த்திசெய்ய உதவிடுங்கள். துணை நடத்தும் ஆதரவு அமர்வுகளில் (நேர்முகமாகவோ இணையத்தின் வாயிலாகவோ ) பங்கேற்கச்செய்யுங்கள்.
நீங்கள் குடும்ப உறுப்பினராக (தாய் அல்லது மாமியார்) இருந்தால் அவளின் தேவைகளை புரிந்துகொண்டு அவளுக்கு உதவிடுங்கள். அருகில் இருந்தால் உங்களால் முடிந்த உதவிகளை (உணவு சமைத்து தருவது, கடினமான நேரத்தில் குழந்தைகளை கவனித்து கொள்வது போன்றவை) செய்து தாருங்கள். இந்த சிறிய செயல் உங்களின் உறவை வலுப்படுத்தும்.
தாயை குறை கூறாமல் (இதென்ன பெரிய சமாச்சாரம். நாங்களெல்லாம் செய்யவில்லையா) போன்ற பேச்சை தவிர்ப்பது நல்லது. ஆண் குழந்தை தான் வேண்டும், குழந்தை அழகாகவும் வெள்ளை நிறத்திலும் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள்.
தாயின் மனநல ஆரோக்கியம் குறித்து குடும்பத்தினருக்கும் துணை சிறப்பு அமர்வுகளை நடத்துகின்றது. சென்னையில் இருந்தால் நேரில் பங்கேற்கலாம் அல்லது இணையத்தின் வாயிலாக பங்கேற்கலாம்.