ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் புதிதாக பிறந்த குழந்தையே முன்னுரிமையாக இருக்கும்.
இங்கே உறுப்பினர் என்பது குழந்தையின் தாய் தந்தையின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களை குறிக்கும்.
கருவுற்ற பெண்ணும் அவரது கணவரும் கூட்டு குடும்பத்தில் வாழலாம். இது அந்த பெண்ணிற்கு வாந்தி மயக்கம் ஏற்படும் போதும் சோர்வாக இருக்கும்போதும், அவரை புரிந்துகொண்டு அவருக்கு ஓய்வு கொடுத்து ஆதரவாக இருக்கும் போது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிலவற்றை புரிந்துகொள்ளுதல் அவசியமாகிறது.
குழந்தையின் வருகையை எதிர்பார்த்திருக்கும் பெற்றோர்க்கு சிறிது தனிமையில் இருக்க இடமளியுங்கள்.
அந்த தாய்க்கு ஓய்வு கொடுங்கள். யோகா, மூச்சு பயிற்சி. மண்டலா போன்றவற்றை பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க உதவுங்கள்.
மற்றவரின் விருப்பத்தை அவர் மேல் திணிக்காமல் அவருக்கு பாதுகாப்பு அளியுங்கள்.
தனக்கு பிடித்த மருத்துவர், மருத்துவமனை, சிகிச்சை முறைகள்(தேவை எனில்) , சடங்குகள் போன்றவற்றை தேர்வு செய்யும் உரிமையை தாய்க்கே கொடுங்கள்.
குடும்ப உறுப்பினருக்காக துணை நடத்தும் ‘தாய்மாறுகளுக்கான மனநல ஆரோக்கியத்தை பேணும்’ அவசியம் குறித்த அமர்வுகளை தவறாமல் பங்கேற்க செய்யுங்கள். " நாங்கள் எல்லாம் இதை தானே செய்தோம்" என்ற அலட்சியம் வேண்டாம்.
தம்பதியர் தனியாக வாழ்கிறார்கள் என்றால்
அவர்களுக்கு தேவையான பொழுது குடும்ப உறுப்பினர்கள் சென்று தவறாமல் உதவ வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள கடைசி மூன்று விஷயங்கள் இங்கேயும் கடைபிடிக்க வேண்டும்.
எந்த சூழலிலும் ஆண் குழந்தை அல்லது குழந்தையின் நிறத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கூடாது. இது தாயையும் குழந்தையையும் வெகுவாக பாதிக்கும்.