மன அழுத்தத்தை போக்க யோகா ஒரு சிறந்த வழி. கருவுற்ற காலத்தில் வாரத்திற்கு ஒரு முறை யோகா பயிற்சி செய்வதால் இடுப்பு எலும்பு பலப்பட்டு கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
வீட்டிலிருந்து செய்யக்கூடிய யோகா பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சியின் ஒளி அட்டையை துணை வழங்குகிறது. தனிப்பட்ட கவனத்திற்காகவும் ஒருவருக்கொருவர் ஆதரவுடன் இருக்கவும் நங்கள் நடத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வரவேற்கிறோம்.
சாலி பார்க்ஸ் என்பவர் கருவுற்ற பெண்களுக்கான யோகா பயிற்சியில் நிபுணர். அவர் அளித்த பயிற்சிகள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
1 . பூனை பசு நீட்சி - இரண்டு கைகள் இரண்டு கால்கள் தரையில் இருக்கும் படி வைக்கவேண்டும் 6 முறை பயிற்சி செய்யவும்.
2 . மரம் பயிற்சி - கால்களை முட்டிக்கு மேல் வராமல் உயர்த்தி 5 முறை மூச்சை அடக்கி 5 முறை செய்யவும்.
3 முக்கோண பயிற்சி- கைகளை முட்டிக்கு கீழ் வைத்து பக்குவத்தில் செய்வது- மூச்சை அடக்கி 5 முறை செய்யவும்.
4 . கழுகு பயிற்சி- கைகளை முறுக்கி வணக்கம் செய்வது. மூச்சை அடக்கி 5 முறை செய்யவும்.
5 . போர்வீரன் பயிற்சி- கைகளை பக்கவாட்டில் நீட்டி கால்களை சற்றே எதிர்கோணத்தில் அகட்டி வைத்து செய்வது- மூச்சை அடக்கி 5 முறை செய்யவும்
6 . நாற்காலி பயிற்சி- இரு கைகளையும் வணக்கம் செலுத்துவது போல் இதயத்திற்கு நேராக வைப்பது. மூச்சை அடக்கி 5 முறை செய்யவும்.
7 . சுவற்றின் அருகில் நின்று இதயத்தை விரிக்கும் பயிற்சி- உள்ளங்கை சுவற்றில் வைத்து பக்கவாட்டில் நின்று செய்யும் பயிற்சி. கைகளை சரியான கோணத்தில் வைத்துக்கொள்ளுங்கள், மூச்சை அடக்கி 10 முறை செய்யவும்
8 . கீழ்நோக்கிய நாய் பயிற்சி- கைடைசி 3 மாதங்களில் இந்த பயிற்சிக்கு பதிலாக குழந்தை வடிவ பயிற்சி செய்யவேண்டும். மூச்சை அடக்கி 5 முறை செய்யவும்
9 . செருப்பு தைக்கும் தொழிலாளி போல் அமரும் பயிற்சி- தொடையின் கீழ் மென்மையான தலையணை ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். 10 முறை மூச்சை அடக்கி செய்வது
10 . தலை முதல் கால் வரை சுழற்றி செய்யும் பயிற்சி- கீழே இருக்கும் கையை தொடையின் அருகில் ஒரு பாதுகாப்புக்காக வைத்துக்கொள்ளுங்கள். மூச்சை அடக்கி 5 - 10 முறை செய்யவும் .
11 . தரையில் அமர்ந்து மீனை போல் மேலுடலை திருப்புதல்- ஒரு திட்டின் மேல் அமர்ந்து மேலுடலை திருப்புதல்- மூச்சை அடக்கி 5 முறை செய்யவும்
12 . படுத்துக்கொண்டு கால்களை மடக்கி செய்யும் பயிற்சி- ஒரு தலையணையை கழுத்தின் கீழ் வைத்து முதுகு தண்டை நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். தொடையின் கீழே ஒரு சிறு தலையணையை வைத்துக்கொள்ளுங்கள்.- 2 நிமிடத்திற்கு மூச்சை அடக்க முயற்சியுங்கள்.
13 . சுவற்றின் அருகில் படுத்து காலை தூக்கி வைத்து செய்யும் பயிற்சி- யோகா பட்டையை காலின் கீழ் பயன்படுத்துங்கள்- கடைசி 3 மாதங்கள் செய்வதை தவிர்க்கவும்- 2 நிமிடத்திற்கு அப்படியே இருக்க முயற்சியுங்கள்.
14 . பூரண ஓய்வு நிலை பயிற்சி- தலையணையில் தலை வைத்து இடது புறமாக திரும்பி படுத்து காலை முன்னே மடக்கவும். மற்ற கால் நேராக இருக்கவேண்டும். 10 நிமிடம் பயிற்சி செய்யவும்.