கருவுற்ற காலத்தில் தாய்க்கு ஏற்படும் கவலைகள் காரணமாக தாயையும் கரு வளர்ச்சியையும் பெரிதும் பாதிக்கிறது. பேபி ப்ளூஸ் மற்றும் பேறுகாலத்தில் ஏற்படும் மனா அழுத்தம் குறித்து நமக்கு தெரியும். ஆனால் குழந்தை வாரிசு கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில் தாய் கருவுற்ற காலத்தில் ஏற்படும் துயரத்தையும் அழுத்தத்தையும் நாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை.
கருவுற்ற காலத்தில் ஏற்படும் அதீத கவலை ஒரு தாய்க்கு மன அழுத்தத்தையும் , தீராத கவலையையும் அளிப்பதோடு அவளின் மனநல ஆரோக்கியத்தையும் வெகுவாக பாதிக்கிறது. இதன் காரணமாக தாய் தன்னை தானே கவனித்துக்கொள்வதில்லை. ஏற்கனவே அவள் உடல் சில மாற்றங்களை சந்திக்கும் வேளையில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தூக்கமின்மை அவளை பெரிதும் பாதிக்கிறது.
குழந்தை தாயுடன் நஞ்சுக்கொடியால் இணைந்துள்ளது. அதனால் தாயின் கவலையால் சுரக்கும் ஹார்மோன்கள் குழந்தையை பாதிக்கும் என்றுதானே நினைக்கிறோம்? ஆனால் உண்மையில் ஓர் அதிசய வேதிப்பொருள் இந்த கார்டிசோல் என்னும் ஹார்மோனை தகர்த்து குழந்தையை பாதுகாக்கிறது.
எனினும் தாயின் ஹொர்மோன்கள் அதிகமாக இருந்தாலோ அல்லது நீண்ட நேரம் இருந்தாலோ இந்த பாதுகாப்பு நீடிப்பதில்லை.
குழந்தைக்கு தேவையான இரத்த ஓட்டம் குறைகிறது. அதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிப்படைகிறது.
குழந்தை குறை பிரசவத்தில் பிரவாவும் எடை குறைவாக பிறக்கவும் வாய்ப்புள்ளது.
குழந்தையின் வாழ்நாள் முழுவதுமான வளர்ச்சியை தாயின் கருவில் இருக்கும் போதே அடித்தளம் நாட்டப்படுகிறது. இந்த அடித்தளம், எதிர்காலத்தில் குழந்தையின் மனநலம், அறிவுத்திறன் மற்றும் நரம்பியல் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும்.
இதனால் நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவெனில் இந்த அடித்தளத்தை நல்ல விதமாக மாற்றியமைக்க நம்மால் முடியும். அவளின் வேலை பளுவை (சமைப்பது, சுத்தம் செய்வது, இன்னொரு குழந்தை இருந்தால் அதனை கவனிப்பது) குறைத்து தாய்க்கு போதிய ஓய்வு தருவதில் குடும்ப உறுப்பினர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
தாய்க்கு போதிய உறக்கமும் சத்தான உணவும் கிடைக்கிறதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர் யாரேனும் கோபப்பட்டாலோ அல்லது அவளை தாக்க முற்பட்டாலோ உடனே உதவியை நாடுங்கள். ஏனெனில் இதை கருவில் இருக்கும் குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும்.கருவுற்ற காலத்தில் அழுத்தத்தையும் அதன் காரணிகளையும் சமாளிக்க வழிமுறைகளை கற்றுத்தரும் வகுப்புகளில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்துங்கள். தாயின் மனநிலை மற்றும் உறக்கத்திற்கென்று ஒரு அட்டவணையை தயார் செய்து, அதைக்கொண்டு தன்தேவைகளை அறிந்துகொள்ளலாம். இதை குறித்த மேலும் தகவல்கள் பின்னர் காண்போம்.
தாய்மார்களுக்காக துணை நேர்முகமாகவோ இணையத்தின் வழிலாகவோ சென்னையில் இலவசமாக வகுப்புகள் நடத்துகிறது.
இது இன்னும் வளர்ந்துவரும் ஒரு புதிய துறையாகும். இப்பொழுது வரை கருவுற்ற காலத்தில் ஏற்படும் கவலை குழந்தையின் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்று புரிந்துகொள்ள துவங்கியுள்ளோம்.