எல்லைகள் என்பது என்ன ?அவற்றை வகுப்பது எப்படி?
எல்லைகள் வகுப்பது என்பது முக்கியமானது. இது கடினமான சுய அக்கறையின் ஒரு பகுதி. குறிப்பாக உங்களுடைய நெருங்கிய உறவு ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் போது,எல்லைகளை தீர்மானிப்பதின் மூலம் அடுத்தவர்கள் உங்களையும் உங்கள் தேவைகளையும் இப்படி முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருத வேண்டும் என்பதற்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் பொறுப்பாகும்.
இது குடும்ப வாழ்க்கை மற்றும் வேலையில் இந்த திறமை நிச்சயமாக கைகொடுக்கும்.ஒருவர் உடல் மற்றும் மன நலம் சரியில்லாத போதும், அடிப்படை ஒழுக்கத்தின் விதிகளை கடைபிடிப்பதும், ஒத்துழைப்பதும் நல்லது. நாம் ஒருவரோடு இசைந்து போக இது நிச்சயம் தேவை. உங்கள் நெருக்கமான உறவிற்கு எல்லைகளை வரையறை செய்யும்போது குற்ற உணர்வு உங்களுக்கு ஏற்படலாம்.
நான் சுயநலவாதியா? அவனோ / அவளோ இதனை செய்யும் நிலைமையில் இருக்கிறார்களா? எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் என்னால் அன்பு செலுத்த முடியாதா?
இதெல்லாம் மிக நியாயமான எல்லைகள் இல்லாமல் நீங்கள் அதிக அளவில் மனச்சோர்வு அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் காலப்போக்கில் வருத்தம் தரக்கூடிய மற்றும் கோபத்தின் வெளிப்பாடே.
உறவின் செயல்முறை.
உங்களை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்கிறார்களா?
நீங்கள் எல்லாவற்றையும் நீட்டிக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது உங்கள் தேவைகள் பின்னால் தள்ளப்பட்டு விட்டதா?
நிச்சயமாக முடியாது என்று சொல்லி பழக வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. காரணம் இல்லாமலோ அல்லது சமாளிக்க இயலாத தேவைகள் ஆகியவற்றிற்கு "நோ" சொல்லிப் பழகுங்கள்.
கவனக்குறைவாக செயல்படுகிறீர்களா?
உதாரணமாக மனநல குறைபாடு உள்ள ஒரு 26 வயது மகனின் பெற்றோர் தாங்கள் அவனுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கடமை என்று உணர்ந்தார்கள். அதேபோல தங்கள் மகனை காயப்படுத்தி விடுவோமோ என்று பயப்பட்டார்கள். அவர்களின் மகன் அவராகவே தன்னை கவனித்துக் கொள்ளக்கூடிய ஒருவர் தான் இருப்பினும் எல்லைகளை வரையறுப்பதும், அவருடைய நடவடிக்கைகளுக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வைப்பதும் அவர்களுக்கு சுதந்திரத்தை சொல்லிக் கொடுக்கும்.
நீங்கள் உங்களை அறியாமலேயே மனதால் வார்த்தையால் பணத்தாலும் மற்றும் உடலால் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
நீங்கள் அந்த மனிதரை அதிகமாக நேசித்தாலும் அவருடைய இந்த நடவடிக்கை அதாவது அவருடைய மனநலக்குறை, வார்த்தை சார்ந்ததாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஒரு போதும் உங்களுடைய அல்லது மற்றவர்களுடைய பாதுகாப்பினை நீங்கள் நேசிப்பவருடைய உணர்வுகளை காயப்படுத்தி விடுவோமோ என்ற எண்ணத்தினால் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்.
உங்களின் எல்லைகளைத் தீர்மானியுங்கள்.
எல்லைகளை நிறுவுவது என்பது ஒரு செயல்பாடு. உங்களுக்கான நேரத்தை எடுத்துக் கொண்டு அதை முதலில் சிறு வழிகளில் துவங்கி முன்னே எடுத்துச் செல்லுங்கள்.
எங்கே உங்கள் எல்லை அமைக்க வேண்டும் என்பது உங்களுடைய தனிப்பட்ட முடிவு.
ஆதரவுக்கான வரைநிலை.
உண்மையிலேயே எந்த அளவுக்கான உதவியோ ஆதரவோ நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் வழங்க முடியும் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள், இதில் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத நடத்தையில் இருந்து உங்களின் பாதுகாப்பு (அல்லது உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு )மிகவும் முக்கியம்.
குடும்பத்தாரிடையே பேச்சுவார்த்தை:
இந்தப் பேச்சுவார்த்தைகள் தற்போதைய வரப்போகிற அல்லது எதிர்நோக்கும் பிரச்சனைகளை குறித்து அமைய வேண்டும். உதாரணமாக உங்கள் குடும்ப உறுப்பினர் மது அருந்துதல் அல்லது போதைப் பொருட்கள் உபயோகித்தால் அவர் நண்பர் குழுவினருடன் நேரம் செலவழிக்கும் போது செய்யக்கூடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர் வாகனங்களை தானே ஒட்டிக் கொண்டு செல்லக் கூடாது என்பதை குடும்பத்தினரிடையே நிறுவுங்கள்.
"இரவு தாமதமாக வருவது ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், மது அருந்துதல் ஏற்றுக்கொள்ளப்படாது" "நான் அதிகாலை ஒரு மணி வரை விழித்திருந்து நீங்கள் வந்த பிறகு சாப்பாடு போட மாட்டேன் .நான் பகலில் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக நிச்சயமாக இரவில் தூங்கி ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்" என்பதை ஆணித்தரமாக கூறுங்கள்.
உங்களுடைய நேசத்துக்கு உரியவரோடு பேச்சுவார்த்தை:
உங்கள் அன்புக்குரியவருக்கு எல்லை வரையரை இருக்கும்போது அவர்கள் ஒத்துழைக்காத பட்சத்தில் அவர்களுடைய பங்கு இதில் தேவையில்லை. அது காலப்போக்கில் மறு நிர்ணயம் செய்து கொள்ளலாம். மிகவும் மென்மையாக அதே நேரத்தில் உறுதியோடு நடந்து கொள்ளுங்கள். கோபமாய் இருந்தீர்கள் என்றால் நீங்கள் எல்லையை வரையறுப்பதற்கு முன் கோபம் தணிய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்."நான் மன வருத்தம் கொண்டது நான் உனக்காக சேமித்த பணத்தை நீ ஒரு கம்ப்யூட்டர் வாங்குவதற்கு உபயோகப்படுத்தி விட்டு மனநல மருத்துவரை பார்ப்பதற்கு மறுக்கிறாய்.நீ மருத்துவரை பார்ப்பதற்கும் ஒழுங்காக உனது மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கும் உறுதி அளிக்காத வரையில் நான் உனக்கு சேமிப்பு கணக்கில் பணம் போட மாட்டேன்".
எல்லைகளுக்கான விதிகள் மற்றும் எதிர்பார்ப்புகள்:
நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பேசி முடிவு செய்ய வேண்டிய சில விதிகளும் எதிர்பார்ப்புகளும் இவற்றோடு சேர்ந்து இருக்கட்டும்:
உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களுடைய வீட்டினில் சில ஏற்கப்பட்ட விதி முறைகள் மற்றும் விளைவுகளை கருத்தில் கொண்டே வசிக்கட்டும்.
எந்தந்த வீட்டு வேலைகள் யாரால் செய்யப்பட வேண்டும் என்பது நிறுவப்பட வேண்டும்.
தனிப்பட்ட சுகாதாரம் பேணப்பட வேண்டும்
வீட்டின் விதிகளை கடைபிடிக்க மறுத்து மிகச் சத்தமாக பாட்டு கேட்பது குடும்பத்தோடு சேர்ந்து உணவு உண்ணாமல் இருப்பது எதற்கெடுத்தாலும் விவாதம் செய்வது.
வீட்டில் மது புகையிலை மற்றும் வேறு போதைப்பொருள்கள் உபயோகப்படுத்துவது
சூதாடுதல்
மருத்துவ ஆலோசனைகளுக்கு சரியாகச் செல்வது
பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்வது.
இந்த செயல்பாட்டில் நீங்கள் தவறு செய்யலாம் உங்கள் மீது கோபம் வேண்டாம். நீங்கள் உங்களால் முடிந்த மிகச் சிறந்த முயற்சி எடுக்கிறீர்கள். சொல்லப்போனால் இந்த கட்டுரையை நீங்கள் படிப்பது உங்கள் அன்புக்குரியவர் மீது நீங்கள் வைத்திருக்கும் பாசமும் அக்கறையும் தான்.