1 . சுய விழிப்புணர்வு மற்றும் சவாலான எதிர்மறை சுய பேச்சு
நாள் முழுவதும் உங்களைச் சோதித்துப் பார்ப்பதன் மூலம், உங்களுக்கு உதவக்கூடிய மற்றும் உதவாத எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை நீங்கள் அடையாளம் காணலாம். நீங்கள் அவைகளை சவால் விட ஆரம்பிக்கலாம் மேலும் அவற்றை மிகவும் பயனுள்ளவையாக மாற்றலாம்.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் கோபம், மனக்கசப்பு அல்லது விரக்தியை அனுபவிப்பதற்கு முன்பு நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? இந்த செயல்பாடு எதிர்மறை சார்புடையதா? இந்த எண்ணங்களை எவ்வாறு அதிக நேர்மறையானதாக மாற்ற முடியும்?
ஏ.பி.சி நுட்பம் - உங்கள் நடத்தைகள் (பி) மற்றும் அதன் விளைவுகள் (சி) பற்றி நீங்கள் அறிந்தவுடன், அவற்றைத் தொடங்கியதைப் பற்றி சிந்திக்க நீங்கள் தொடக்க நிலையில் பணியாற்றலாம் (ஏ).
2 . மனமுழுமை :
வழி காட்டுதலுடன் மேற்கொள்ளப்பட்ட தியானங்கள், மறுவினை மற்றும் பிற மனநிறைவுகளின் தலையீடுகள் மூலம், உங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் இன்னும் வெளிப்புறத்திலிருந்து கவனிக்க ஆரம்பிக்கலாம். கவனமுள்ள சுவாசத்தை பயிற்சி செய்வது, நேர்மறையான முடிவெடுத்தலை அதிகரித்தும் மற்றும் அதிக அளவு நம்பிக்கை உருவாக்கும் தொடர்புடையது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கவனமான சுவாச பயிற்சியை பற்றி தெரிந்துகொள்ள இந்த வலைத்தளத்திலோ அல்லது இணையத்திலோ பார்க்கவும் .
3 . அறிவாற்றல் மறுசீரமைப்பு:
சூழ்நிலைகள் மற்றும் நபர்களைப் பற்றிய கூடுதல் வெளிப்புற பார்வையைப் பெற்று நடந்த நிகழ்வு அல்லது கிடைத்த அனுபவத்தை மறுவடிவமைக்க முயற்சிக்கவும். "நான் அந்த பேட்டியை கெடுக்கவில்லை. என்னை பேட்டி கண்டவர் கேட்ட மிகவும் கடினமான கேள்வி அது , நான் எப்படியோ அதை எதிர்கொண்டேன். இதற்கான நல்ல விளைவை தருவது கடவுளிடம் உள்ளது".
4 . நேர்மறை தருணங்களை விரும்புங்கள்
நேர்மறையான எண்ணங்களை தரும் படங்களையும் மற்றும் உணவுகளையும் கொண்டு உங்களை நிரப்பிவிடுங்கள். இது எதிர்மறை சார்பு ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்ய உதவுகிறது
5 . எதிர்மறை சார்புகளை சமாளிப்பதற்கான 3 பயிற்சிகள்:
இருளில் கிடைத்த ஒளி கீற்று :
நம்பிக்கையையும், தாங்கும் திறனையும் உருவாக்குவதற்கான பல படிகள் இதில் அடங்கும். நீங்கள் ஒரு நேர்மறையான மனநிலைக்கு மாறுவீர்கள், தற்போது நீங்களே எதிர்கொள்ளும் சிரமத்தை அடையாளம் கண்டு, அதை
எதிர்கொள்ள தேவையானவற்றை செய்து , அதற்கு இருளில் கிடைத்த ஒளி கீற்று போல் (அதாவது நேர்மறையான அம்சங்கள்) இருப்பீர்கள்.
அறிவாற்றல் இணைவிலிருந்து விலகுதல் என்பது ஒரு நினைவூட்டல் பயிற்சியாகும், இது உங்கள் எண்ணங்களை எண்ணங்களாக மட்டுமே பார்க்க பயன்படுத்தலாம். நீங்கள் அந்த எண்ணங்களை மறுவடிவமைக்கலாம், மேலும் உங்களுக்கும் அந்த எதிர்மறை நிகழ்வுகள் / சூழ்நிலைகளுக்கும் இடையில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தலாம்.
ஒரு தருணத்தை தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்: உங்கள் வாழ்க்கையில் நேர்மறையின் மைக்ரோ தருணங்களை முழுமையாகப் பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள். அவற்றை பற்றி எழுதுங்கள், இதன் மூலம் உங்களுக்குத் தேவைப்படும்போது அவற்றைத் திரும்பிப் பார்க்கலாம்.
நாம், நம் வாழ்வில் சிலசமயம் எதிர்மறையான விஷயங்களில் சிக்கித் தவிக்கும்போது, அது, எதிர்மறை சார்புகள் நம்மில் எவ்வாறு வேரூன்றக்கூடும் என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது. எவ்வாறாயினும், மிகவும் நேர்மறையான மனநிலையைப் பின்பற்றவும், நமது நல்வாழ்வை அதிகரிக்கவும் நமது மூளையை மீண்டும் பயிற்றுவிக்க முடியும்.
நேர்மறை உளவியல் என்பது எதிர்மறை எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அகற்றுவதைப் பற்றியது அல்ல - அவற்றை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பது பற்றியது.