அண்மையில் இசையை பயன்படுத்தி கருவுற்ற தாயின் உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்திற்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. எனினும் கருவுற்ற காலத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைக்கு ஒரு வலுவான வரையறுக்கப்பட்ட வழிமுறைகளை கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதனால் எந்த மாதிரியான இசை, எத்தனை நேரம் எத்தனை நாட்களுக்கு ஒலிக்கச்செய்ய வேண்டும் என்று அறிந்துகொள்ள முடியும்.
கருவுற்ற தாய்க்கு இசை எவ்வாறு உதவும் என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
1 . உறக்கம்
இசையை கேட்பதால் ஆழ்ந்த உறக்கம் கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
2 . கருவுற்ற காலத்தில் கவலை அல்லது அழுத்தம்
கருவுற்ற காலத்தில் ஏற்படும் கவலைக்கு இசை ஒரு அருமருந்தாக உள்ளது.
3 . கருவுற்ற காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம்.
கருவுற்ற காலத்தில் இசையை கேட்பதால் உயர் இரத்த அழுத்தம் வெகுவாக குறைகிறது. எனவே வழக்கமாக அளிக்கப்படும் சிகிச்சைக்கு இது ஒரு நல்ல மாற்றாக உள்ளது.
4 . பேறுகாலத்தில் ஏற்படும் கவலை மற்றும் அழுத்தம்
பேறுகாலத்தில் இசையை கேட்பதால் கவலைகள் வெகுவாகக் குறைவதாக ஆய்வுகள் கூறுகிறது.
5 . கருவுற்ற காலத்தில் ஏற்படும் மன அழுத்தம்
இசை, கருவுற்ற காலத்தில் ஏற்படும் கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது.
6 . பிரசவ வலி
பிரசவத்தின் போது ஏற்படும் வழியை குறைக்க உதவுகிறது.
7 . திட்டமிட்ட சிசேரியன் திட்டமிட்டு அறுவை சிகிச்சை(சிசேரியன்) செய்து குழந்தையை எடுக்கும் முன்னர் இசையை கேட்பதால் தாயின் கவலை மற்றும் அழுத்தத்தை குறைத்து அதை சமாளிக்கும் ஆற்றல் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
முதுகு தண்டில் செலுத்தும் மயக்க மருந்து அளித்து சிசேரியன் செய்து குழந்தை எடுக்கும் முன் இசையை கேட்பதால், குழந்தை பிறப்பின் அனுபவத்தை நிறைவாக அனுபவித்து உணர முடிவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
8 . பேறுகாலத்திற்கு பின் ஏற்படும் மனஅழுத்தத்தை தடுக்கும்
கருவுற்ற காலத்தில் ஆரோக்கியமான மனநலம் மிகவும் அவசியமாகிறது (குறிப்பாக கடைசி மூன்று மாதங்களில்). இதனால் பேறுகாலத்திற்கு பின் அவரின் மனநல கோளாறுகளை தவிர்க்கவும் சோர்வாக உணராமல் இருக்கவும் முடிகிறது.
கடைசி மூன்று மாதங்களில் இசையை கேட்பதால் பேறுகாலத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கருவுற்ற காலத்தில் மனநல நல்வாழ்விற்காக சர்வதேச கருத்து களம் பல நடைமுறை குறிப்புகளை வெளியிட்டுள்ளது.