பேறுகாலத்திற்கு முன் ஏற்படும் மனநல ஆரோக்கியதிற்கு சவாலாக இருப்பதற்கு முக்கியமான காரணம் பண வசதி குறைபாடு மட்டும் இல்லை, சரியான சிகிச்சை முறை இல்லாததும், பிரச்சனையை புரிந்துகொண்டு வழிகாட்டுபவரும் இல்லாதது தான்.
இவையனைத்தும் பெரிய சவால்கள் தான் என்றாலும் அதற்கு தீர்வு காண நம்மால் முடிவதில்லை. ஏனென்றால் பிரச்சனை குறித்து சரியான புரிதல் இல்லாதது தான் காரணம்.
“இல்லை, இதுபோல் இங்கு நடப்பதில்லை. இது வெளிநாட்டு கலாச்சாரம். நம் நாட்டில் இப்படி நடப்பதில்லை.”
ஏராளமானோர் கருவுற்று குழந்தைகளை பெற்றுள்ளனர்.
இந்த மாதிரியான சிந்தனைகளை அந்த பெண்ணின் மனதில் செலுத்தாதீர்கள். அவர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள்.
நாம் அனைவரும் ஆர்பாட்டம் இல்லாமல், ஊசி இல்லாமல் நல்லமுறையில் தானே குழந்தைகளை பெற்றோம்.
இந்த அணுகுமுறையால் சுமார் இருபது சதவிகிதம் பெண்கள் பேறுகாலத்தில் ஏற்படும் மனஅழுத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தாயின் ஆரோக்கியமும் குழந்தையின் வளர்ச்சியும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இத்தகைய தீவிர பிரச்சனையை ஏற்படுத்தும் ‘பேறுகாலத்தில் ஏற்படும் மனநல ஆரோக்கிய குறைபாடுகள்’ கண்டறியாமலே போகிறது. பொதுவான அறிகுறிகளான சோர்வு, எரிச்சல், மனநிலை மாற்றங்கள் ஆகியவை போதிய தூக்கம் இல்லாததால் என்றும் எல்லா தாயும் சமாளிக்கும் பொதுவான சவால் தான் என்றும் விட்டுவிடுகிறோம். அவை தான் பேபி ப்ளூஸ் என்கிறோம்.
தாயின் மனநல ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சனைகளின் புரிதல் அவருக்கு மட்டும் இருந்தால் போதாது. அவளது கணவரும் குடும்பத்தினரும் ஆபத்துகளை புரிந்துகொண்டு, அவருக்கு ஆதரவு அளிக்கவேண்டும். கணவரின் மனநல ஆரோக்கியமும் இங்கே முக்கிய பங்காற்றுகிறது.
உளவியல் மற்றும் சமூக பனி குறித்து படிக்கும் இளநிலை, முதுநிலை பட்டதாரிகளுக்கு பேறுகாலத்தில் ஏற்படும் மனநல மாற்றங்கள் மற்றும் குழந்தையின் வளர்ச்சி குறித்து ஒரு அடிப்படை புரிதல் இருப்பதில்லை. உயிரியல் குறித்து படிக்கும் (பயோ மெடிக்கல்) மருத்துவர்கள் அதன் அடிப்படையில் தீர்வு காணலாம் (மேலும் விவரங்கள் பின்னர் பார்ப்போம்).
இந்த விழிப்புணர்வின்மையின் ஆழமான பொது சுகாதார தாக்கங்கள் குறித்து கொள்கை வகுப்பாளர்களும் அறிந்திருக்கவில்லை (மேலேகுறிப்பிட்டுள்ள சில காரணங்களும் அடங்கும்)
மனநல ஆரோக்கியம் என்ற முக்கிய கூற்றை அனைத்து மனநலம் சார்ந்த கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயல்களில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுத்த வேண்டும். தனிப்பட்ட கவனிப்பு முறைகள், குடும்பத்தினருக்கு புரிய வைத்து ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி, அவருக்கு போதிய ஊட்டச்சத்து, உறக்கம், ஓய்வு ஆகிய அனைத்தும் அளித்து பேறுகாலத்தில் ஏற்படும் மனநல ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
துணை- மாணவர்களுக்கும், சமூக பணியாளர்களுக்கும், தாய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை நடத்துகின்றது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.