ஐக்கிய நாடுகளின் ஆரோக்கிய சிந்தனை திட்டம் என்பது கருவுற்ற மற்றும் புதிதாக குழந்தை பிறந்த தாய்மார்களுக்கான மனநல ஆரோக்கிய திட்டமாகும். இத்திட்டம் சமூக ரீதியான உளவியல் சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக நல பணியாளர்களும் ஒரு தாயக அனுபவம் உள்ளர்வர்களும் இதை புரிந்து கொண்டு பலரிடம் கொண்டு செல்ல முடியும்.
துணை இந்த ஆரோக்கிய சிந்தனை திட்டத்தை பேறுகாலத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தையின் நலத்தில் ஆர்வமுள்ள சமூக நல பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கிறது.
ஆரோக்கிய சிந்தனை திட்டத்தில் உள்ள சில முக்கிய கருத்துக்கள்:
இத்திட்டம் சமூக ரீதியான உளவியல் சார்ந்த தலையீட்டால் உருவாக்கப்பட்டுள்ளதால் தாயுடனும் அவரது குடும்பத்தாருடனும் பலமுறை சந்தித்து பேசவேண்டியது அவசியம். மருந்து மாத்திரைகள் கொடுப்பதில்லை. தன்னலத்தை பார்த்துக்கொள்வதற்கு தேவையான நல்ல பழக்கங்களை (மனநிலை, உறக்கம், ஊட்டச்சத்து ஆகியவை) ஏற்படுத்திக்கொண்டு தன் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள அந்தத்தாய்க்கு சில வழிமுறைகளை மட்டுமே நாம் கூறப்போகிறோம்.
ஒரு எளிய பரிசோதனையில் இருந்து அந்த தாய் எந்த அளவிற்கு மன அழுத்தத்தில் இருக்கிறார் என்றும் எதிர் காலத்தில் அவரது மனநிலை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதா என்றும் கண்டறியமுடியும்.
ஆரோக்கிய சிந்தனை திட்டத்தின் ஒரு முக்கிய பகுதி தாயின் அறிவாற்றலை கொண்டு அவரின் எதிர்மறையான எண்ணத்தை நீக்குவதே ஆகும்.
இது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது
1 . தாயின் நல்வாழ்வு 2 . தாய் சேய் பிணைப்பு 3 . உற்றார் உறவினருடன் தாயின் உறவு.
தாயை களங்கப்படுத்தாமல் அவரின் நல்வாழ்வில் கவனம் செலுத்தி அதன்மூலம் பிறக்க போகும் குழந்தையின் நலமும் எதிர்காலத்தையும் காக்கவேண்டும். மற்ற விஷயத்தில் உற்றார் உறவினர்கள் மாற்று கருத்து கூறினாலும் குழந்தை என்று வரும்போது அதன் ஆரோக்கியமும் எதிர்காலமும் அனைவரின் ஒருங்கிணைந்த குறிக்கோளாக இருக்கும். குழந்தை நலமாக இருக்க முதன்மையாக தாயை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளவேண்டும்.
குடும்பத்தின் முழு ஒத்துழைப்புடன் நமது கலாச்சாரத்தின் அடிப்படையிலும் நமது பணியை செய்ய வேண்டும்.
நல்வாழ்விற்காக ஒரு குறிப்பிட்ட முறையை மட்டும் பயன்படுத்தாமல் ஒருமுழுமையான ஒருங்கிணைந்த முறையை பயன்படுத்துகிறோம். இது மேலும் இது மேலும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வழிவகுக்கிறது (தாய்க்கு தகுந்த முறையை பின்பற்றுவது).
ஆரோக்கிய சிந்தனை பயிற்சியை பெற விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.