எந்தவொரு உறவிற்கும் ஆமோதிப்பு என்பது ஒரு முக்கிய உறவுத்திறன் ஆகும். ஆனால் மன நல நெருக்கடியில் உள்ள ஒருவருக்கு இது ஆக்ஸிஜன் போன்றதாகும். ஒரு அதிர்ச்சியிலிருந்து மீண்டவர்களை அல்லது மோசமான மனநிலையில் உள்ள ஒருவரை, அவர்கள் மிகைப்படுத்துகிறார்கள் அல்லது அவர்கள் யதார்த்தத்துடன் தொடர்பில் இல்லை என்று கூறப்படுவதை விட மோசமான ஒன்று எதுவும் இல்லை. இந்த அணுகுமுறை அவர்களை தற்காப்புக்குள்ளாக்குகிறது, மேலும் அவர்களை தொடர்புகொள்வதற்கும் அவர்களை ஆறுதல்படுத்துவதற்கும் நமக்கு உள்ள வழிகளை அடைத்துவிடுகிறோம்.
ஆமோதிப்பு என்பது எங்களுக்கு அளிக்கப்படும் ஒரு முக்கியமான பயிற்சி திறன் ஆகும். ஆமோதிப்பு என்பது மற்றொரு நபரின் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் உலகத்தின் சொந்த அனுபவமாக ஏற்றுக்கொள்வதும் வாய்மொழியாக அங்கீகரிப்பதும் ஆகும். உதாரணமாக,உங்கள் நண்பர் ஒரு கல்லூரி நண்பர்கள் இணை விழாவில் அவர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு கேலி செய்யப்பட்டதைப் போல உணரக்கூடும். இது சரியல்ல என்று நீங்கள் உணரக்கூடாது. தனது கருத்தாக அவர் சொல்வது சரி என்று அவர் நம்புகிறார். தகவல்தொடர்புகளில் ஒப்புக்கொள்வது ஒரு முக்கியமான பாலமாகும்.
ஆமோதிப்பு என்பது ஒருவர் சொல்வதை கவனமாக கேட்பது, உண்மையில் , அவரின் அனுபவத்தை உண்மையானது என்று ஏற்றுக்கொள்வது. நாங்கள் அடையாளம் காணும் நபரின் சொந்த உணர்வுகள் அல்லது உணர்ச்சிகளை இது பிரதிபலிக்கிறது.
"இந்த நிலைமை குறித்து நீங்கள் சோகமாக இருப்பதை நான் காண்கிறேன்."
"இது உங்களை எவ்வளவு கோபப்படுத்தியது என்பதை நான் அறிவேன். நான் இவ்வளவு கோபமாக இருக்க மாட்டேன் என்றாலும், நீங்கள் எவ்வளவு கோபமாக இருக்கிறீர்கள் என்பதை நான் உணர்கிறேன், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்"
ஆமோதிப்பு என்பது உண்மையில் நீங்கள் யாருடனும் பயன்படுத்தக்கூடிய ஒரு திறமையாகும். வேலையில், உங்களுக்கு பரிச்சயம் அல்லாதவர்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் முதலில் அதைப் பயிற்சி செய்து, மற்றவர்களுடன் தொடர்புகளை எவ்வளவு எளிதில் சாத்தியமாக்குகிறது என்பதைப் பாருங்கள்! மக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் உணர்ச்சிகள் ஆமோதிக்கப்படுவதை உணரும்போது மனம் திறந்து மேலும் நம்புவார்கள்.
கூடுதல் விவரங்கள்:
ஒரு நெருக்கடியில் உள்ள ஒருவர் உணர்ச்சிவசப்பட்ட புதைமணலில் இருக்கிறார், எனவே அந்த சூழ்நிலையில் அவர்களின் உணர்வுகளை நிராகரிப்பது, அவர்களை மொத்தமாகவே நிராகரிப்பது எனவே கொள்ளப்படுகிறது . ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவரின் ஒரு உணர்வை நிராகரிப்பதால் அவர் தன்னை உலகமே நிராகரித்ததுபோல் உணர்வார். “நீங்கள் என்னை ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் எப்போதும் மற்ற நபரை ஆதரிக்கிறீர்கள் ”. என்று அந்த தொடர்பு உடைகிறது.
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதற்கான முடிவு, பாதிக்கப்பட்டவரின் தனி மனித தீர்ப்பாக மாறிவிடுகிறது. அவர்களின் உணர்ச்சி மற்றும் உணர்வுகள் குறைபாடுடையவை என்ற செய்தியைப் அவர்கள் பெறுவது நெருக்கடியில் இருக்கும் ஒரு நபருக்கு அவர்களின் கருத்துக்களின் மேல் அவநம்பிக்கையை கற்பிக்கிறது. இதனால் அவர்களுக்கு முடிவுகளை எடுப்பது, நடவடிக்கை எடுப்பது அல்லது சிக்கல்களைத் தீர்ப்பது கடினம். இது "கற்ற உதவியற்ற தன்மை" என்று அழைக்கப்படுகிறது.
ஆமோதிப்பு என்பது பாதிக்கப்பட்ட நபர் சொல்லும் அனைத்தையும் கண்மூடித்தனமாக ஒப்புக்கொள்வது என்பதில்லை . இது உங்கள் இருவரின் அனுபவங்களுக்கிடையில் பொதுவான நிலையைக் கண்டுபிடித்து அதை வெளிப்படுத்துகிறது. இந்த உறவின் மீதான நம்பிக்கைக்கு இந்த பொதுவான அடிப்படை முக்கியமானது.