ஒரு ஆன்மீக நடைமுறைக்கும் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் இடையே ஒரு நேர்மறையான தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. எல்லாம் கடந்த ஒரு மெய்ப்பொருள் மீதான நம்பிக்கை, மனச்சோர்வை குறைக்க வல்லது என்பதை இது காட்டுகிறது.
இதேபோன்ற ஆராய்ச்சி ஆன்மீகம் மற்றும் பதட்டம் அல்லது மன அழுத்தத்திற்கு இடையிலான உறவை ஆய்வு செய்துள்ளது. ஆன்மீக பண்பாடுகள் பிற்கால வாழ்க்கையில் மருத்துவ நோயாளிகள், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், இருதய பிரச்சினைகள் உள்ள நடுத்தர வயது மக்கள் மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருபவர்கள் உள்ளிட்ட பல மக்களில் பதட்டத்தின் அளவைக் குறைத்தது.
ஆன்மீகம் மற்றும் அதிர்ச்சியின் பின் பட்ட சீர்கேடு (பி.டி.எஸ்.டி) ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை ஆராயும் ஒரு வளர்ந்து வரும் இலக்கியம் உள்ளது. ஒரு மதிப்பாய்வு மதம், ஆன்மீகம் மற்றும் அதிர்ச்சி அடிப்படையிலான மனநலப் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளைப் ஆராயும் 11 ஆய்வுகளைக் கண்டறிந்தது. இதன் மூலம் மூன்று முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியது.
இந்த ஆய்வுகள் பொதுவாக மதமும் ஆன்மீகமும் அதிர்ச்சியின் பின்விளைவுகளைக் கையாள்வதில் உதவியாக இருக்கும் என்று காட்டுகின்றன.
இரண்டாவதாக, அதிர்ச்சிகரமான அனுபவங்களுக்கு பிறகு ஒருவரின் மதம் அல்லது ஆன்மீகத்தின் மேல் ஈடுபாடு அதிகமாகிறது. இதன் காரணம் ஆன்மிக பயிற்சியின் மனதை ஆற்றும் பண்பினால் இருக்கலாம்.
மூன்றாவதாக, சில அணுகு முறைகள் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கு உதவுகிறது. ஆன்மிக பழக்கங்களின் மூலம் சமாளிக்கும் திறன், திறந்த மனப்பான்மை, ஏன் இந்த உலகில் இருக்கிறோம் போன்ற கேள்விகளை நிர்வகிக்கும் திறன் - இவை எல்லாம் பயனளிக்கும் அணுகுமுறைகள்.
இந்த நன்மைகள் எப்போதும் உண்டா? உதாரணமாக, அதிக கண்டிப்பான மத பழக்க வழக்கங்கள் உள்ள சமூகங்களில், மனநலப் பிரச்சினைகள் அதிகம் காணப்படுகின்றன. பெண்களின் உரிமைகளை பாதிக்கும் கடுமையான மதக் குறியீடுகள் (எடுத்துக்காட்டாக) ஒரு அதிர்ச்சியின் பாதிப்பை அதிகரிக்க வாய்ப்புண்டு.
சிலர் தங்கள் மத அல்லது ஆன்மீக நம்பிக்கைகள் மனநல நிபுணர்களால் புரிந்து கொள்ளப்படவில்லை அல்லது ஆராயப்படவில்லை என்று எண்ணலாம். பலருக்கு, மருத்துவர்கள் ஒரு நபரின் ஆன்மீக வாழ்க்கையை முற்றிலுமாக புறக்கணிக்கிறார்கள் என்று படலாம். ஆயினும்கூட, இவை ஒருவரின் மீட்புக்கு முக்கிய ஆதாரமாக இருக்கலாம்.