துணை


துணையின் குறிக்கோளானது, அதிர்ச்சியில் இருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கு அவர்களின் மீட்பில் உதவுவதும், அவர்களுக்கான தாங்குதிறனை உருவாக்குவதும் ஆகும். ஒவ்வொரு தனி மனிதனும் மன துன்பங்களிலிருந்தும், அதிர்ச்சியின் பின் விளைவுகளிலிருந்தும் விடுபட தகுதியானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை ஒப்புக் கொண்டு அவர்களுக்கு பொருத்தமான சிகிச்சை மற்றும் சமூக ஆதரவு வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவரிடம் உள்ள குணப்படுத்தும் திறனை அதிகரிக்க முடியும்.

 

இந்த நோக்கத்திற்காகவே, அதிர்ச்சியில் இருந்து தப்பியவர்களுக்காக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அவர்கள் தங்களை குணப்படுத்திக்கொள்வதற்கான தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதிர்ச்சி மற்றும் உதவி மீட்புக்கு எதிரான களங்க எண்ணத்தை எதிர்த்துப் போராடும் சமூக மற்றும் முறையான மாற்றங்களுக்காக நாங்கள் செயல்படுவோம்.

 

நாங்கள் கவனம் செலுத்தும் பகுதிகள்:


  • சிறுவயது துன்புறுத்தல், பாலியல் வன்முறை, அதிர்ச்சி, மனச்சோர்வு மற்றும் மீட்பு. அதிர்ச்சியிலிருந்து மீள ஊக்குவித்தல், மன ஆரோக்கியம் மற்றும் தாங்குதிறனை அதிகரித்தல்.

  • அதிர்ச்சி, மனச்சோர்வு மற்றும் கவலைக்கான புதிய மற்றும் நிருபிக்கப்பட்ட முறை அடிப்படையிலான சிகிச்சைகள்: அறிவாற்றல் அணுகுமுறைகளுடன் இணைந்து உடல் அடிப்படையிலான சிகிச்சைகள்.

  • பாதிக்கப்பட்டோர்,சிகிச்சைபெறுவோர் மற்றும் சமூகத்தில் அதிர்ச்சி பற்றிய விழிப்புணர்வு மற்றும் உணர்திறனை உருவாக்க உதவுதல்.

  • சிகிச்சையாளர்கள், சமூக சேவையாளர்கள், சட்ட அமலாக்க அமைப்புகளுக்கான திறன் மேம்பாடு.

துணை - குழு

 

துணை, தப்பி பிழைத்தவர்கள், அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள், மனநலக் குறைபாட்டின் துயரை அனுபவிப்பவர்கள், சமூகநலப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ சமூகத்தினர் என சமூகத்தின் அனைத்துத்தரப்பு மக்களின் நலனிலும் அக்கறை கொண்டுள்ளது. இந்த அக்கறையே துணை குழு உருவாக காரணமாய் அமைந்தது. சுய விழிப்புணர்வு கொண்ட தனிநபர்கள் ஒன்றிணைந்து தங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த அனுபவங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து அதிர்ச்சி மற்றும் மன அழுத்தம் குறித்த சமூக நிலைமைகளை சரி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கோடு உருவானதுதான் துணை.

 

உங்களின் மீட்பு பயணத்தில் ஒரு நம்பிக்கையான வழித்"துணை"  

 

ஸ்மிதா ராஜன்

நடன இயக்கத்தை சார்ந்த கவுன்சிலர் மற்றும் நடன பயிற்றுவிப்பாளர் நமது உடல் சார்ந்த அனுபவங்கள் சிறந்ததொரு வாழ்க்கைக்கான வழியை நமக்கு தெரிவிக்கும் என்று நம்புபவர். அதிகமாக அனுபவ வழிமுறைகள் மற்றும் புதிய கலை கற்றுக்கொள்ளுதல்,  இவைகளை ஆறுதல் மருத்துவமாக உபயோகிப்பதில் மிகவும் பலன்கள் உள்ளது என்பதை அனுபவ பூர்வமாய் கண்டறிந்தவர். அதிர்ச்சி மன அழுத்தம் மற்றும் கவலை ஆகிய பிரச்சனைகளிலிருந்து மீண்டவர்கள் உடன் இவர் பணிபுரிபவர். ஸ்மிதா தன்னுடைய அனுபவம் மற்றும் நடன இயக்க செய்முறை பயிற்சிகள் மூலம், அதிர்ச்சி மற்றும் மன அழுத்தத்திலிருந்து மீண்டு வருதல் மற்றும் ஆறுதல் பெறுவதற்கான விழிப்புணர்வையும் அதற்கான சிகிச்சைகளையும் நடத்துபவர்.

 

சுபஸ்ரீ

மென்திறன் மற்றும் நல் ஆரோக்கிய பயிற்சியாளர். ஒரு சமுக செயற்பாட்டாளர் மற்றும் பயண ஆர்வலர். தகவல் திரட்டுகள் வழங்கும், மற்றும் பன்மொழி பெயர்ப்புக்கான நிறுவனத்தை நடத்தி வருகிறார். தமிழ் மொழியில் மிகுந்த ஈடுபாடு மற்றும் ஆர்வம் கொண்டவர். 

 

மரியா விக்டர்

மரியா ஒரு மனநலக் கல்வியாளர் மற்றும் சான்றிதழ் பெற்ற அதிர்ச்சிக்கான நிபுணர். சமூகத்தில் மனநலம் சார்ந்த விஷயங்களில் பங்கெடுக்கும் ஆர்வலர். உடல் சார்ந்த சிகிச்சையுடன் இணைந்து பேச்சு சிகிச்சையை வழங்குவது அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்தும் முறையில் சிறந்த பலனைத் தரும் என்று அவர் நம்புகிறார். மரியா மகப்பேறு மனநலத்தில் மற்றும் தாய்மார்களின் நல்வாழ்வில் ஆர்வம் கொண்டவர் மற்றும் தாய் மற்றும் குழந்தை மனநலம் குறித்த விழிப்புணர்வைக் கொண்டுவருவதில் உறுதியாக உள்ளார். 

 

Dr.S. ஸ்ரீவித்யா

Dr.S. ஸ்ரீவித்யா, மனநல இயலில் முனைவர் பட்டம் பெற்றவர். மன ஒருமைப்பாடுடன் இணைந்த சிகிச்சையளிப்பவர். பதினைந்தாண்டுக்களுக்கும் மேலாக மனநல இயல் பரிசோதனைகள் மற்றும் கவுன்சிலிங்கில் அனுபவம் வாய்ந்தவர்.

 

வேங்கடகிருஷ்ணன்  

25 வருடங்களுக்கும் மேலான பெருநிறுவன அனுபவம் பெற்றவர். சேவை, நிர்வாகம், பயிற்சி மற்றும் மார்கெட்டிங் ஆகிய துறைகளில் நேரடி கள அனுபவம் பெற்றவர். இதுவரை 5000 க்கும் அதிகமானவர்களுக்கு விற்பனை, சேவை மற்றும் படைப்பாற்றல் திறன்  வளர்ப்பு பயிற்சியளித்துள்ளார். சென்னையில் ஒரு மொழி சார்ந்த தகவல் மற்றும் செய்திகள், ஊடக, அச்சு நிறுவனங்களுக்கு  வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆழ்ந்த தமிழ் ஈடுபாடு உடைய இவர் பலருக்கும் தமிழைக் கற்று கொடுத்து வருகிறார். 

 

கிரீஷ் குமார்

சென்னையைச் சார்ந்த பொருளாதார சந்தை ஆய்வாளர், முதலீட்டாளர், மற்றும் பிராணிகள் நல விரும்பி. சுய வளர்ச்சிக்கு மற்றும் பொதுவான மன நலத்திற்கு நரம்பியல் அறிவியல் நிச்சயம் ஒரு கருவியாக செயல்படும் என்பதில் மிகவும் உறுதியாய் செயல்படுபவர். தனது சொந்த அனுபவங்கள் மூலம் உந்தப்பட்டு அனைவருக்கும் அதிர்ச்சி பற்றிய விழிப்புணர்வும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கான திறன்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னை முழுவதுமாய் இதில் ஈடுபடுத்திக் கொண்டவர். மீண்டு வந்தவர்கள், ஆதரவு தருபவர்கள், சமூக நல களப்பணியாளர்கள் மற்றும் அறிவுசார் வல்லுனர்கள் ஆகிய அனைவருக்கும் இது பயன் தர வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை உள்ளவர். பருவநிலை மாற்றங்கள் குறித்த தொழில்நுட்பத்தில் மிகத் தீவிரமான ஆர்வம் கொண்டவர். கிரிஷ் துணை அமைப்பின் தலைமை பொறுப்பாளர்.


பங்களிப்பாளர்கள்:


வீடியோஸ் & எடிட்டிங்: 

  • சந்திரசேகர் 

  • ஸ்ரீனிவாசன் 


பணிப்பயிற்சி:

  • அனன்யா கோபாலகிருஷ்ணன்

  • ஈஷா சேதுநாதன்

  • சுரபி பால் 

  • ஆதிஸ்ரீ ரவி

  • அபூர்வ சோமேஷ்வர்

  • நீரஜ் அரவிந்தன்

மொழிப்பெயர்ப்பு: 

  • கல்யாணி கோபாலகிருஷ்ணன்

  • அகிலா கிருஷ்ணன்


குரல் பங்களிப்பு: 

  • ஹிந்துஜா ரவிச்சந்திரன்

  • அனந்த் ராமசந்திரன் 

  • வெங்கட் விஸ்வநாதன் 

  • சுபா சஞ்சயன் 

  • சஞ்சயன் குலசேகரன்